விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, பிக்பாஸ் ஜோடிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.