Shah Rukh Khan : அது எப்படி 4 நாள்ல கொரோனா சரியாகும்? நயன் திருமணத்திற்கு வந்து சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்

Published : Jun 10, 2022, 08:54 AM IST

Shah Rukh Khan : நயன்தாராவின் திருமணத்தில் ஷாருக்கான் கலந்துகொண்டதை பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு எப்படி நான்கு நாட்களில் கொரோனா பாதிப்பு குணமானது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

PREV
14
Shah Rukh Khan : அது எப்படி 4 நாள்ல கொரோனா சரியாகும்? நயன் திருமணத்திற்கு வந்து சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்

நடிகை நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய நடிகர்களில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானும் ஒருவர். திருமணத்திற்காக பாரம்பரிய உடை அணிந்து போஸ் கொடுத்தவாரு இருந்த புகைப்படங்களும் நேற்று வெளியாகி வைரலாகின. இந்நிலையில், ஷாருக்கான் கலந்துகொண்டதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

24

ஏனெனில் நடிகர் ஷாருக்கான் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. அப்படி இருக்கையில் அவர் நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்டதை பார்த்த நெட்டிசன்கள், ஷாருக்கானுக்கு எப்படி நான்கு நாட்களில் கொரோனா பாதிப்பு குணமானது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

34

ஆனால் ஷாருக்கான் தரப்போ, அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், அது சில தினங்களிலேயே சரியாகிவிட்டதனால் தான் அவர் நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளது.

44

நடிகர் ஷாருக்கான் தற்போது ஹீரோவாக நடித்து வரும் ஜவான் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாகவே நடிகர் ஷாருக்கான், நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா...! லீக்கான தகவல்... ஷாக் ஆன ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories