லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த கசிந்த தகவல்!

First Published | Jul 23, 2021, 12:37 PM IST

லெஜெண்ட் சரவணன் அருள், தன்னுடைய கடை விளம்பரங்களில் ஆடி பாடி நடித்ததை தொடர்ந்து, தற்போது ஒரு படத்தையும் தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.
 

saravanan

பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், விளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார். இவர் நடித்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக பாதியில் நின்ற நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது.

ஆக்ஷன் காட்சியில் லெஜெண்ட் சரவணன், பின்னி பெடல் எடுக்கும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

ஆரம்பகால விளம்பரங்களில் இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் தோன்றியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி ட்ரோல் செய்யப்பட்டாலும், அதனை சற்றும் கண்டு கொள்ளாமல்... தொடர்ந்து அடுத்தடுத்த விளம்பரங்களில் நடித்து மக்கள் மனதில் நிலைத்து விட்டார்.

Tap to resize

saravanan

யாரும் எதிர்பாராத நிலையில் தன்னுடைய முதல் படம் குறித்து அறிவித்தார் சரவணன். இந்த படம் சமூக கருத்தை எடுத்து சொல்ல கூடிய படம் என்றும், மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை 'உல்லாசம்' படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

saravanan

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதரிக்கு மேல் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் லெஜெண்ட் சரவணைக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதாலா நடித்து வருகிறார்கள். 

saravanan

சமீபத்தில் படப்பிடிப்பு குறித்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. மேலும் காமெடி நடிகர் விவேக்கின் கடைசி படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

saravanan

இந்நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாயகனான சரவணன், ஒரு விஞ்ஞானியாக நடிக்கிறாராம். இந்த தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளதோடு படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

Latest Videos

click me!