70 களில் மிகவும் கவர்ச்சியான மற்றும் அழகான தோற்றத்துடன் பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் விமி. அப்போதைய லேடி சூப்பர் ஸ்டாரும் அவர் தான். 1943 ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள ஜலந்தரில் பிறந்தவர் தான் விமி. இவருக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது. அவர் ஷிவ் அகர்வால் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து இந்த ஜோடிக்கு 2 குழந்தைகளும் பிறந்தன.
விமி தனது கணவருடன் கொல்கத்தாவில் ஒரு பார்ட்டிக்கு வந்தபோது இசையமைப்பாளர் ரவியை சந்தித்துள்ளார். அப்போது விமியின் அழகில் மயங்கிய ரவி 'ஏன் நீங்க சினிமாவில் நடிக்கக் கூடாது' என்று கேட்டுள்ளார். 'இரண்டு குழந்தைகளுக்கு தாயான எனக்கு சினிமாவில் யார் சான்ஸ் கொடுப்பார்கள்?' என விமி கேட்க, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி விமியை மும்பைக்கு வரவழைத்து இயக்குனர் பிஆர் சோப்ராவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ரவி.
இதையும் படியுங்கள்... புற்று நோயால் மரணமடைந்தார் 'படிக்காதவன்' பட நடிகர் பிரபு! இறுதி சடங்கு செய்து.. தகனம் செய்த டி.இமான்!
விமி சினிமாவில் நடிப்பதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை, ஆனால் அவரது கணவர் முழு ஆதரவு அளித்ததால் தைரியமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் விமி. இவர் கடந்த 1967ம் ஆண்டு பி.ஆர்.சோப்ரா இயக்கிய முதல் படமான 'ஹம்ராஜ்' என்கிற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் ராஜ்குமார், சுனில் தத், மும்தாஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும் பெரும்பாலானவர்களின் பார்வை விமியின் மீதே இருந்தது. அந்த அளவுக்கு அழகால் வசீகரித்தார் விமி.
இதையடுத்து அன்றைய காலகட்டத்தில் பிரபல நடிகர்களாக விளங்கிய சுனில் தத், சஷி கபூர், ராஜ் குமார் ஆகியோருடன் அடுத்தடுத்து பணியாற்றினார் விமி. பி.ஆர்.சோப்ராவின் மூலம் சினிமாவில் நுழைந்த விமி, அவருடன் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்ததால், பல பட வாய்ப்புகள் குவிந்தும், பி.ஆர்.சோப்ராவின் ஒப்பந்தம் காரணமாக அவரால் பிற படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விமி, பி.ஆர்.சோப்ரா உடன் சண்டை போட்டு அவரின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்தார்.
இதையடுத்து விமி ஏராளமான படங்களில் பணியாற்றினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியடைந்தன. தொடர் தோல்விப் படங்களால் தயாரிப்பாளர்கள் அவருக்குப் படங்களைக் கொடுக்கவில்லை. இதையடுத்து கையில் பணமில்லாமல் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டார் விமி. அந்த சமயத்தில் அவரது கணவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விமியிடம் தகராறில் ஈடுபட்டாராம்.
இதையும் படியுங்கள்... டி.ராஜேந்தர் செய்த செயல்... 8 கோடி நஷ்டஈடு வழங்கிய தமிழக அரசு! ஏன் தெரியுமா?
அதோடு சிறு தயாரிப்பாளர்களின் படங்களில் பணியாற்றுமாறு விமிக்கு அழுத்தம் கொடுத்தாராம் ஷிவ். இதனால், கணவருடனான உறவு மோசமடைந்த, அந்த நேரத்தில், நடிகை விமிக்கும் திரைப்பட தயாரிப்பாளர் ஜாலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி இருக்கிறது. இதையடுத்து கணவரை பிரிந்து ஜாலியுடன் வாழ ஆரம்பித்துள்ளார் விமி.
இந்தக் காதல் விமியின் வாழ்வில் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. சில நாட்களுக்குப் பிறகு, காதல் ஜாலியால் விமி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதையடுத்து விமியை அவளது காதலன் ஜாலி விபச்சாரத்தில் தள்ளினான். இதனால் விமியின் சினிமா கெரியர் முடிவுக்கு வந்தது. விபச்சாரத்தில் ஈடுபட்ட சில ஆண்டுகளிலேயே நடிகை விமிக்கு கல்லீரல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அப்போது காதலனும் கைவிட்டுவிட்டாராம்.
அந்த சமயத்தில் சிகிச்சை பெற பணமில்லாததால் அரசு மருத்துவமனையின் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார் விமி. இதையடுத்து சிகிச்சை பலனின்றி கடந்த 1977ம் ஆண்டு தனது 34 வயதிலேயே உயிரிழந்தார் விமி. அவர் இறந்தபோது, அவரது சடலத்தை தோளில் சுமக்க கூட யாரும் இல்லையாம். நடிகையாக இருந்தபோது சொகுசு கார்களில் பயணித்தவர் விமி. ஆனால் இறுதியில் அவரது சடலம் கை வண்டியில் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஃபேஸ்புக் லைவில் பேசிக்கொண்டிருக்கும் போதே..! தற்கொலைக்கு முயன்ற நடிகரால் பரபரப்பு..!