கையில் LGBT கொடி... வாயில் சிகரெட் உடன் ‘காளி’ - லீனா மணிமேகலையின் ஆவண பட போஸ்டரால் வெடித்த சர்ச்சை

First Published | Jul 4, 2022, 7:30 AM IST

Leena Manimekalai : கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை இயக்கத்தில் உருவாகி உள்ள காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையில் சிக்கி உள்ளது.

பிரபல கவிஞரான லீனா மணிமேகலை, தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்தும், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றியும் எழுதிய கவிதைகள் மிகவும் பிரபலமானவை.

இதையும் படியுங்கள்... விடாது துரத்தும் சர்ச்சை..சூர்யா..ஞானவேல் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு...

இவர் பறை, தேவதைகள், பலிபீடம் போன்ற ஆவணப்படங்களையும், மாடத்தி, செங்கடல் ஆகிய திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். இதில் செங்கடல் படத்தில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தஞ்சம் புக வரும் அகதிகள் பற்றியும், சமீபத்தில் வெளியான மாடத்தி படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றியும் எடுத்துக் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... விக்ரமின் கோப்ரா படத்திலிருந்து வெளியாகும் அடுத்த பாடலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு!

Tap to resize

குறிப்பாக அவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 15-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று அசத்தியது. நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்ட இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், லீனா மணிமேகலை தான் அடுத்ததாக இயக்கியுள்ள காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஆர்ஆர்ஆர், விக்ரம் பிளாக்பாஸ்டர்களை பின்னுக்கு தள்ளிய கடைசி விவசாயி !

அந்த போஸ்டரில் காளி கெட் அப்பில் இருக்கும் பெண், ஒரு கையில் LGBT சமூகத்தின் கொடியையும், வாயில் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

Latest Videos

click me!