ரூ. 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை வரவாக பெற்றுள்ளது இந்த படம். இதை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் புரடக்ஷன் இணைந்து தயாரிக்கிறது. செப்டம்பர் 30 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. தமிழில் உருவாகும் இந்த படம் ஹிந்தி ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா மூவியாக திரை காண உள்ளது.