Latha Rajinikanth Coolie Movie First Review : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் உலகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17ஆம் தேதிகள் தொடர் விடுமுறை என்பதால் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி படம் வெளியாகிறது. மாஸ்டர், லியோ, விக்ரம் ஆகிய படங்களின் வரிசையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜூனா, சௌபின் ஷாகிர், காளி வெங்கட், ஸ்ருதி ஹாசன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.