அரசியுடன் கோர்ட்டுக்கு புறப்பட்ட பாண்டியன், கோமதி, கதிர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 558ஆவது எபிசோடில் நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல செல்லும் அரசியை அவரது அண்ணன்கள் பாசத்தால் தாங்கும் காட்சிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
27
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய புரோமோ வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நாளுக்கு நாள் சுவாரஸ்யமான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நேற்றைய எபிசோடு வரையில் கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 559ஆவது எபிசோடில் அரசி கோர்ட்டுக்கு செல்லும் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் இன்னும் கோர்ட்டுக்கு செல்லவில்லை. இப்போதுதான் வீட்டிலிருந்து புறப்படுகிறார்.
37
குமாரவேலுவுக்கு எதிராக சாட்சி சொல்லும் அரசி
கோர்ட்டுக்கு செல்ல தயாராகும் நிலையில் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் தான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முன்னதாக எப்போதும் இல்லாத திருநாளாக செந்தில் மற்றும் மீனாவின் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் இன்னும் சம்பளமே போடாத நிலையில் உனக்கு வைரத்துல கம்மல் வாங்கனும், அது வாங்க வேண்டும், இது வாங்க வேண்டும் என்று செந்தில் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
47
ஜெயிலுக்கு செல்லும் குமாரவேல்
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு மீனா அமைதியாகவே இருக்கிறார். இதைத் தொடர்ந்து குமாரவேல் ஜெயிலுக்கு போக கூடாது என்று அவரது அம்மா மாரி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தார். முத்துவேல் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, குமாரவேல் மட்டும் ஜெயிலுக்கு போக கூடாது என்று வழக்கறிஞரிடம் பேசுகிறார். இதைத் தொடர்ந்து அரசி கோர்ட்டுக்கு புறப்படும் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
57
கோர்ட்டுக்கு புறப்படும் அரசி
அதில், அரசி பயமாக இருக்கிறதா, டீ குடிக்கிறயா, ஆம்லெட் போட்டு தருகிறேன், முட்டை தோசை ஊற்றி தருகிறேன் என்று அப்படி இப்படி என்று தாங்கு தாங்குன்னு தாங்குகிறார்கள். இதுவரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் போலீஸ் ஸ்டேஷன் காட்சி மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், முதல் முறையாக இப்போது நீதிமன்ற காட்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. அதில் தன்னை ஏமாற்றி கடத்தி சென்ற குமாரவேல் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு எதிராக அரசி சாட்சி சொல்ல செல்கிறார்.
67
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 559ஆவது எபிசோடு
ஒரு புறம் கோமதிக்கு கோர்ட்டுக்கு செல்வது பிடிக்கவில்லை. வழக்கறிஞரை வைத்து பார்த்துக் கொள்வோம். நீதிமன்றம் போக வேண்டாம் என்றார். ஆனால், பாண்டியன் கேட்பதாக இல்லை. தவறு செய்தவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார். ஆதலால், பாண்டியன், கோமதி மற்றும் அரசி ஆகியோர் கோர்ட்டுக்கு செல்லும் நிலையில் கதிரும் அவர்களுடன் புறப்பட்டு செல்கிறார்.
77
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
இதற்கிடையில் குமரவேலுவின் பாட்டியும், பாண்டியனின் மாமியாருமான காந்திமதி தனது பேரன் குமாரவேலுவிற்காக இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பாண்டியனிடம் கெஞ்சுகிறார். ஆனால், பாண்டியன் எப்படியாவது அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். பாண்டியன், கோமதி, அரசி மற்றும் கதிர் ஆகியோர் கோர்ட்டுக்கு புறப்பட்டு செல்லும் காட்சிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.