Karthik Going To save His Wife Revathi : கார்த்திகை தீபம் 2 சீரியலில் மைதிலியை காப்பாற்றிய கார்த்திக் தனது மனைவி மற்றும் மச்சினிச்சியை காப்பாற்றினாரா இல்லையா என்பது இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் 2 சீரியலில் பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த கூடாது என்பதற்காக காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் அவர்களுடன் சந்திரகலா ஆகியோர் இணைந்து சாமுண்டீஸ்வரி, கார்த்திக்கை பழி தீர்க்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஒவ்வொரு பிளானும் சொதப்பலில் முடியவே, இப்போது காளியம்மாவை வைத்து ரேவதி, சுவாதி மற்றும் ரோகிணி ஆகியோரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டுள்ளனர்.
அப்படி அவர்களை தீர்த்துக்கட்டினால் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த முடியாது அல்லவா. அதற்காகக் கோயிலில் நடைபெற்று வரும் தீமிதி திருவிழாவில் ரேவதி, ரோகிணி மற்றும் சுவாதி ஆகியோர் தீமிதிக்க இருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில் தீமிதி திருவிழா ஒளிபரப்பு செய்யப்பட்டது. ரேவதி தலையில் மஞ்சள் தண்ணீர் ஊற்ற பூசாரி தயாராக இருந்தார். அதோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
23
கார்த்திகை தீபம் 2 இன்றைய அப்டேட்
ஆனால், அதில் தான் டுவிஸ்ட். முத்துவேலுவிடமிருந்து மைதிலியை காப்பாற்றிய கார்த்திக்கிற்கு தீமிதிக்க இருக்கும் ரேவதி, சுவாதி மற்றும் ரோகிணி ஆகியோருக்கு ஊற்றப்படும் மஞ்சள் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் கலந்த தண்ணீரை ஊற்ற சிவனாண்டி திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்தது. இதன் காரணமாக கோயிலில் இருக்கும் மயில்வாகனத்திற்கு போன் போட அவரால் கோயில் பூஜை சத்தத்தால் பேச முடியவில்லை. மேலும், கார்த்திக் பேசுவதும் சரியாக கேட்கவில்லை.
இதன் காரணமாக பதற்றத்தோடு காரில் புறப்பட்டு வரும் கார்த்திக் தனது மனைவி ரேவதி, மச்சினிச்சி ரோகிணி மற்றும் சுவாதியை காப்பாற்றினாரா இல்லையா என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்னதாக என்னதான் சீரியலாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? பூக்குழியில் இறங்கும் போது துணியில் கங்கு பட்டால் உடை தீப்பற்றி எரியும் என்பது கூடவா இயக்குநருக்கு தெரியாது. பூக்குழி போன்று செட் வச்சு அதில் பக்தர்களை இறங்க வைத்திருக்கிறது கார்த்திகை தீபம் 2 சீரியல் டீம்.
33
ரேவதியை காப்பாற்றும் கார்த்திக்
அதுவும் ரேவதி, சுவாதி மற்றும் ரோகிணி ஆகியோரை சேர்த்தால் மொத்தம் 9 பேர் தான். பூக்குழி திருவிழா என்றால் குறைந்தது 30 முதல் 50 பக்தர்கள் வரையில் இறங்கி அம்மனின் அருள் பெற்று செல்வது வழக்கம். இங்கு சீரியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் கதைகள் தான் அரங்கேறி வருகிறது என்று நெட்டிசன்கள் முதல் ரசிகர்கள் வரையில் அனைவரும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.