தீமிதி திருவிழாவில் ரேவதியை காப்பாற்றவே, அவரும் நல்ல படியாக தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்த நடக்க முடியாமல் தவித்த அவரை கார்த்தி தூக்கி செல்லும் காட்சி கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கார்த்திகை தீபம் 2 சீரியலில் நேற்றைய 939ஆவது எபிசோடில் பெட்ரோல் கலந்த தண்ணீரை ரேவதி, சுவாதி மற்றும் ரோகிணி தலையில் பூசாரி ஊற்ற செல்கிறார். கார்த்திக் அவர்களை காப்பாற்ற காரில் வேகமாக வந்து கொண்டிருக்கிறார். அதோடு கார்த்திகை தீபம் 2 சிரீயலில் நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய 940ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த கூடாது என்பதற்காக காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் அவர்களுடன் சந்திரகலா ஆகியோர் இணைந்து சாமுண்டீஸ்வரி, கார்த்திக்கை பழி தீர்க்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஒவ்வொரு பிளானும் சொதப்பலில் முடியவே, இப்போது காளியம்மாவை வைத்து ரேவதி, சுவாதி மற்றும் ரோகிணி ஆகியோரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டுள்ளனர்.
24
காளியம்மாள் கைது
அப்படி அவர்களை தீர்த்துக்கட்டினால் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த முடியாது அல்லவா. அதற்காகக் கோயிலில் நடைபெற்று வரும் தீமிதி திருவிழாவில் ரேவதி, ரோகிணி மற்றும் சுவாதி ஆகியோர் தீமிதிக்க இருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில் தீமிதி திருவிழா ஒளிபரப்பு செய்யப்பட்டது. ரேவதி தலையில் மஞ்சள் தண்ணீர் ஊற்ற பூசாரி தயாராக இருந்தார். அதோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
ஆனால், அதில் தான் டுவிஸ்ட். முத்துவேலுவிடமிருந்து மைதிலியை காப்பாற்றிய கார்த்திக்கிற்கு தீமிதிக்க இருக்கும் ரேவதி, சுவாதி மற்றும் ரோகிணி ஆகியோருக்கு ஊற்றப்படும் மஞ்சள் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் கலந்த தண்ணீரை ஊற்ற சிவனாண்டி திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்தது. இதன் காரணமாக கோயிலில் இருக்கும் மயில்வாகனத்திற்கு போன் போட அவரால் கோயில் பூஜை சத்தத்தால் பேச முடியவில்லை. மேலும், கார்த்திக் பேசுவதும் சரியாக கேட்கவில்லை.
34
கார்த்திகை தீபம் 2 சீரியல்
இதன் காரணமாக பதற்றத்தோடு காரில் புறப்பட்டு வரும் கார்த்திக் தனது மனைவி ரேவதி, மச்சினிச்சி ரோகிணி மற்றும் சுவாதியை காப்பாற்ற வருகிறார். இந்த நிலையில் தான் இன்றைய 940ஆவது எபிசோடில் கார்த்திக் அவர்கள் மூவரையும் காப்பாற்றவே அவர்களும் நல்லபடியாக தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதைத் தொடர்ந்து காளியம்மாள், சிவனாண்டி ஆகியோரை போலீஸ் கைது செய்தனர்.
முதல் முறையாக பூக்குழியில் இறங்கியதால் ரேவதிக்கு காலில் காயம் ஏற்பட்டு அவரால் நடக்க முடியாமல் போய்விடுகிறது. இதன் காரணமாக கார்த்திக் அவரை தூக்கிச் செல்லும் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், காயத்திற்கு மருந்தும் போடுகிறார். அப்போது, ரேவதி மைண்ட் வாய்சாக காலை பிடிக்க வைக்கவே இவ்வளவு போராட வேண்டியிருக்கே, என்னை பிடிக்க வைக்க இன்னும் என்னலாம் போராட வேண்டி இருக்கோ என்று பேசுகிறார். அதோடு கார்த்திகை தீபம் 2 சிரியலில் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.