Rajinikanth vs MGR : தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கோலோச்சி வரும் ரஜினிகாந்த், ஆரம்ப காலகட்டத்தில் சில நடிகைகளுடன் நடிக்க முடியாமல் போனதற்கு எம்.ஜி.ஆரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்.
1980-களில் ரஜினிகாந்த் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த சமயத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சில நடிகைகள் மறுத்திருக்கிறார்கள். அந்த நடிகைகள் வேறுயாருமில்லை லதா மற்றும் ஜெயலலிதா தான். இவர்கள் ரஜினியுடன் நடிக்க மறுத்ததன் பின்னணியில் எம்.ஜி.ஆர் போட்ட ஒப்பந்தமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அதிமுக என்கிற கட்சியை தொடங்கி அரசியலில் பிசியாக இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்துவந்தார். அப்படி 1974-ம் ஆண்டு மோரிஸ் நாட்டுக்கு சினிமா சம்பந்தமாக ஒரு பயணம் மேற்கொள்ள இருந்தார்.
25
MGR agreement to heroines
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர், அதில் லதாவுக்கும் தங்களுக்கும் உள்ள ஒப்பந்தம் பற்றி பேசிய எம்.ஜி.ஆர். நடிகை லதா தங்களிடம் அனுமதி வாங்காமல் எந்த படத்திலும் நடிக்க முடியாது. அப்படி நடிக்க கமிட்டானாலும் எங்கள் படத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் உள்ளதாக எம்ஜிஆர் தெரிவித்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் லதா நடிக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை போட்டுவிட்டாராம் எம்ஜிஆர். இந்த நிலையில் தான் நடிகை லதாவுக்கு ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
35
Rajinikanth, MGR
ஆனால் எம்.ஜி.ஆர் போட்ட ஒப்பந்தத்தின் காரணமாக அவரால் ரஜினி படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதற்கு எம்ஜிஆர் போட்ட முட்டுக்கட்டையே காரணம் என்று அந்த சமயத்தில் பரவலாக பேசப்பட்டது.
இதேபோன்ற ஒரு சிக்கலை நடிகை ஜெயலலிதாவும் சந்தித்திருக்கிறார். அவருக்கும் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் நடிக்காமல் போனதன் பின்னணியில் எம்.ஜி.ஆரின் தலையீடு இருந்ததாக அந்த சமயத்தில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் இந்த சர்ச்சைக்கு ஜெயலலிதாவே பதிலளித்துள்ளார்.
1979-ம் ஆண்டு பத்திரிகையில் கேள்வி பதில் பாணியில் ஒரு பேட்டியை கொடுத்திருந்தார் ஜெயலலிதா. அதில் ரஜினியுடன் நடிக்க மறுக்கும் செய்தி உண்மையா என்கிற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, நான் நடிக்க மறுத்தது உண்மை தான். அதற்கு வேறெந்த காரணமும் இல்ல, அவர்கள் கொடுத்த ரோல் எனக்கு திருப்திகரமாக இல்லாததால் நடிக்கவில்லை என கூறினார்.
இதனிடையே 1980-ம் ஆண்டு ஜெயலலிதா சினிமா வாய்ப்பு ஏதுமின்றி தவித்து வருவதாக செய்திகள் வந்தது. அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகைக்கு ஜெயலலிதா மறுப்பு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், சினிமாவில் நான் மீண்டும் நடிக்க வேண்டும் என போராடவில்லை. உண்மையிலேயே எனக்கு சினிமாவில் நடிக்க நிறைய நல்ல நல்ல வாய்ப்புகள் வந்தது.
55
Jayalalitha
அதில் முக்கியமான படம் தான் பில்லா. அந்தப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க என்னை தான் முதலில் அணுகினார் அப்படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி. ஆனால் நான் தான் சில காரணங்களுக்காக அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். அதன்பின்னர் தான் நடிகை ஸ்ரீபிரியாவை அந்த ரோலில் நடிக்க வைத்தார்கள்.
இப்படி ரெண்டு முக்கியமான நடிகைகளும் தமிழ் நாட்டின் சூப்பர்ஸ்டாராக வளர்ந்து வந்த நடிகர் ரஜினிகாந்தின் படத்தில் நடிக்கமுடியாமல் போனதற்கு, காரணம் பின்னணியில் இருக்கும் எம்.ஜி.ஆரின் தலையீடும், அவர் ஒப்பந்தம் மூலம் போட்ட முட்டுக்கட்டையும் தான் என அப்போது சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.