
பன்முக திறமையாளராக இருக்கும் தனுஷ், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிப்பு அசுரன் என பெயர் எடுத்தவர். ராயன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர், இவர் டாப் ஹீரோ ஒருவரை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனுஷ் ஹீரோவாக அறிமுகமானபோது... இவரை வாழ்த்தி வரவேற்றவர்களை விட, இவரெல்லாம் ஒரு சில படங்களிலேயே இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார் என ட்ரோல் செய்தவர்கள் தான் அதிகம். ஆனால் தன்னை தூற்றியவர்களையே வாழ்த்த வைத்தவர் தனுஷ். 2022-ல் மனைவி ஐஸ்வர்யாவின் விவாகரத்து தனுஷை மிகவும் பாதித்தாலும்... தன்னுடைய குடும்பத்தின் ஆதரவாலும், பிள்ளைகள் இருவரின் கருத்தை ஏற்று கொண்டதாலும் அதில் இருந்து மிக விரைவாகவே மீண்டும் தன்னுடைய திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாத்திமா பாபுவை மிரட்டியது யார்? திருமண வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
மேலும் தனுஷின் 50-ஆவது படமாக சமீபத்தில் வெளியான ராயன்... விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. 90கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 160 முதல் 170 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய சகோதரியின் மகன் ஹீரோவாக நடித்துள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்' என்கிற படத்தை லோ பட்ஜெட்டில் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக அனிகா சுரேந்தரன் நடித்துள்ளார். இளசுகளின் காதல், சேட்டை, போன்றவற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிவைத்துவிட்ட நிலையில் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது.
இதை தொடர்ந்து முன்னை நடிகர் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து, தனுஷ் இயக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷ் இயக்க உள்ள நான்காவது படத்தில் பிரபல நடிகர் அருண் விஜய் தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். ஆக்ஷன் டிராமாவாக உருவாக உள்ள இந்த படத்தில், அருண் விஜய்யுடன் இணைந்து நடிகர் தனுஷும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் 120 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது. எனவே இதுவரை தனுஷ் இயக்கிய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ள படம் இது தான். இப்படம் குறித்த மற்ற தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில்.... தனுஷ் - அருண் விஜய் காம்போ திரையில் பட்டாசாக இருக்கும் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு சற்று கூடுதலாகவே உள்ளது.
நாகேஷ் வாயை கிளறி விட்டு... 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடல்!
மேலும் தனுஷ் சென்டிமெண்டாக தன்னுடைய தந்தையின் முதல் பட ஹீரோவான, ராஜ்கிரணை வைத்து கடந்த 2017-ஆம் ஆண்டு பா பாண்டி என்கிற படத்தை இயக்கி தன்னுடைய முதல் ஹிட்டை கொடுத்தார். இந்த படத்திற்கு பின்னர் முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ், ராயன் படத்தை இயக்கி முடித்த பின்னர் தன்னுடைய சகோதரியின் மகனை வைத்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்' என்கிற படத்தை இயக்கினார். ஏற்கனவே தன்னை சிறந்த இயக்குனர் என இரண்டு படங்களில் தனுஷ் நிரூபித்துள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்தின் புரோமோஷன் பணிகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும்... தனுஷ் - அருண் விஜய் படம் மீது தான் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
மேலும் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, நாகார்ஜுனா அக்கினேனி முக்கிய ரோலில் நடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம், தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது படமான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் வெளியாகும் அதே நேரம் அதாவது இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
34 படமும் ஃபிளாப்.. ஐட்டம் டான்சில் விஜயகாந்துக்கு நிகராக கட்டவுட் வைத்து கொண்டாடப்பட்ட அனுராதா!