நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடித்த 3 படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தை இயக்கிய அவர், அதன்பின் 7 ஆண்டுகளாக எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார்.
24
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷை விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா, அதன்பின் சினிமாவில் பிசியானார். தொடர்ந்து மியூசிக் விடியோ ஒன்றை இயக்கி வெளியிட்ட அவர், அடுத்ததாக படம் இயக்கும் பணிகளில் பிசியானார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் என்கிற திரைப்படம் தயாராக உள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள அப்படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் கதையின் நாயகர்களாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், கேமியோ ரோலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
44
லால் சலாம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன் கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் ஐஸ்வர்யா. கடந்த வாரம் தனது தந்தை ரஜினியுடன் திருப்பதி ஏழுமலையான கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.