'லால் சலாம்' கதையை ஆட்டையை போட்டாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியதால் பரபரப்பு!

First Published | May 24, 2023, 8:30 PM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் 'லால் சலாம்' திரைப்படம், திருட்டு கதை சர்ச்சையில் சிக்கி உள்ள சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

சமீப காலமாக, அடுத்தடுத்து பல படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றன. அதிலும் சில படங்கள் வெளியாவதற்கு முன்பே இது போன்ற சர்ச்சைகளை சந்திக்கிறது. குறிப்பாக கடந்த வாரம் வெளியான விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' திரைப்படம் கதை சர்ச்சையில் சிக்கியதால், ரிலீஸ் ஆகும் சமயத்தில் இப்படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்ததால், பல கோடி நஷ்டத்தை சந்தித்தார்.

அதே போல் அட்லீ இயக்கி வரும் ஜவான் படமும், இது போன்ற சர்ச்சையில் சிக்கி பின்னர் அதில் இருந்து மீண்டது. மேலும் சசிகுமார் நடித்த அயோத்தி, விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் போன்ற படங்களும் இதே போன்ற கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது.

தம்மாதூண்டு உடையில்... கவர்ச்சியில் வெறியேற்றும் ஐஸ்வர்யா தத்தா!
 

Tap to resize

இதைத்தொடர்ந்து தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கி வரும் 'லால் சலாம்' படத்தின் கதை, "நான் லைகா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த படத்தின் கதையை ஓத்தே இருப்பதாகவும்,  இதனால்  தன்னுடைய கதையை ஆட்டையை போட்டு தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த படத்தை இயக்கி வருகிறாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக மோகன் என்பவர் கூறியுள்ளார்.

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மோகன். இவர் கடந்த ஆண்டு, கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கிய கதை ஒன்றை.. தயாரிக்க வேண்டும் என தன்னுடைய கதையை லைகா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். லைகா நிறுவனத்திடம் இருந்து இவருக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

நம்பியார் மகள் சினேகாவுடன் சரத் பாபுவுக்கு நடந்த 2-ஆவது திருமணம்! பலருக்கும் தெரியாத அரிய தகவலை கூறிய மகன்!

இந்நிலையில் திடீரென லைகா நிறுவனம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்தது.  தன்னுடைய கதையில் ஃபுட்பால் விளையாட்டில் இரு நண்பர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தான் படத்தின் கதை என மோகன் தெரிவித்திருக்கும் நிலையில், அதே போன்ற கதை கதைக்களத்தை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டாக மாறுதல் செய்து இப்படத்தை ஐஸ்வர்யா இயக்குகிறாரா? என்கிற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளார் மோகன்.

இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா தரப்பில் இருந்து, மோகனின் கதையை படித்துப் பார்த்துவிட்டு தன்னுடைய கதைக்கும், மோகன் எழுதிய கதைக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று பதில் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அடுத்தடுத்து கதை சர்ச்சையில் படங்கள் சிக்கி வருவதால், 'லால் சலாம்' படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் போது உண்மை என்ன என்பது தெரியவரும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பைக் ரேஸ் இடையில்... சமையல் கலையையும் அவிழ்த்து விட்ட அஜித்! வைரலாகும் புகைப்படம்!
 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும், லால் சலாம் படத்தில், கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக விக்ராந்த் நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கேமியோ  ரோலில் நடிக்கிறார்.  இவருக்கு தங்கையாக நடிகை ஜீவிதா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!