சிவரஞ்சனியாக நடித்து சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வென்றவர் - யார் இந்த லட்சுமி பிரியா சந்திரமௌலி?

Published : Jul 22, 2022, 06:31 PM ISTUpdated : Jul 23, 2022, 12:21 PM IST

துணை வேடங்களில் நடித்து வரும் இவர் தனது நடிப்பால் கவர்ந்து இன்று தேசிய விருதை வெல்லும் திறமைமிகு நடிகையாக மாறிவிட்டார்.

PREV
15
சிவரஞ்சனியாக நடித்து சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வென்றவர் - யார் இந்த லட்சுமி பிரியா சந்திரமௌலி?
lakshmi priyaa chandramouli

நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி சிறந்த துணை நடிகைக்கான 68-வது தேசிய விருதை வென்றுள்ளார். சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் என்னும் படத்திற்காக இந்த விருதை பெற்றுள்ளார்.    வசந்த் எஸ் சாய் இயக்கிய இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. குறும்படங்களின் தொகுப்பான இந்த படம் ஜெயமோகன் எழுதிய தேவகி சித்தியின் நாட்குறிப்பு, அசோக மித்திரனின் விமோசனம், ஆதவன் எழுதிய ஓட்டம் ஆகிய கதைகளின் சாரமாக இருந்தது.

25
lakshmi priyaa chandramouli

இந்த படத்தில் லட்சுமி பிரியா சந்திர மௌலி பார்வதி, காளீஸ்வரி, ஸ்ரீனிவாசன், கருணாகரன், சுந்தரராமன் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர். இந்த படத்தில் லட்சுமி பிரியா சிவரஞ்சனியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியில் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

 மேலும் செய்திகளுக்கு.. சிறந்த திரைக்கதைக்கான 68 - வது தேசிய விருதை தட்டி சென்ற மண்டேலா

35
lakshmi priyaa chandramouli

2010 ஆம் ஆண்டு வெளியான முன் தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், சாந்தி நிலையம், தர்மயுத்தம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அதன் பின்பு கௌரவம் என்னும் படத்தில் நடுத்த இவர் சுத்த கதை, தேவதைகள், கள்ளப்படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..  GV Prakash : இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன்... முதல்முறையாக தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் உருக்கம்

45
lakshmi priyaa chandramouli

சமீபத்தில் சிவரஞ்சீனியும் இன்னும் சில பெண்களும் படத்தை அடுத்து கர்ணன் படத்தில் பத்மினியாகவும் கோல்டு கேஸ் என்னும் மலையாள படத்தில் வழக்கறிஞராகவும், பயணிகள் கவனிக்கவும் என்னும் படத்தில் தமிழ் என்ற ரோலிலும் நடித்துள்ளார். இதற்கிடையே ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் லட்சுமி பிரியா சந்திரமௌலி.

மேலும் செய்திகளுக்கு.. சூர்யா மட்டுமல்ல இன்னொரு ‘சூரரைப் போற்று’ பட நடிகருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது- அவர் யார் தெரியுமா?

55
lakshmi priyaa chandramouli

இவர்  முன்னாள் தேசிய அளவிலான கிரிக்கெட் வீராங்கனையும், தேசிய அல்டிமேட் ஃப்ளீஸ்பி சாம்பியனுமாவார்.  மனித வளத்தின் நிமுணத்துவம் பெற்ற சமூகப் பணியின் முதுகலை பட்ட படிப்பு முடித்த இவர் தனியார் நிறுவனத்தில் ஹெச் ஆர் ஆக பணிபுரிந்து வந்தார்.

பின்னர் நாடக குழு உடன் தன்னை இணைத்துக் கொண்ட இவர் கடினமான பணி காரணமாக நாடகங்களில் நடிக்கவில்லை என்றாலும் படம் உருவாகும் விதம் பற்றிய விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை தெரிந்து கொண்டதாக கூறியிருந்தார். துணை வேடங்களில் நடித்து வரும் இவர்  தனது நடிப்பால் கவர்ந்து இன்று தேசிய விருதை வெல்லும் திறமைமிகு நடிகையாக மாறிவிட்டார்.

click me!

Recommended Stories