தற்போது 68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் நடைபெற்று வருகிறது. இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியானசூரரை போற்று ஐந்து விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.
5 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூர்யாவின் சூரரைப் போற்று - யார் யாருக்கு என்ன விருது.. முழு விவரம்
இதன் தொடர்ச்சியாக யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்காக நடக்கும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தை கொடுத்து மனங்களை ஈர்த்திருந்தார் இயக்குனர் மடோன் அஸ்வின். இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடக்கும் கிராம பஞ்சாயத்து தேர்தல் பின்னணிகள் இந்த படம் உருவாகி இருந்தது.