தமிழில் சுந்தர பாண்டியன், கும்மி, மிருதன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை லட்சுமி மேனன். கேரளாவின் திருப்பணித்துறையை சேர்ந்த இவர் தான் செய்த அடாவடியால் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
அதாவது லட்சுமி மேனன் தனது நண்பர்கள் 3 பேருடன் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்கு சென்றார். அப்போது லட்சுமி மேனன் தரப்பினருக்கும், ஆலப்புழாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.
24
ஐடி ஊழியரை தாக்கிய லட்சுமி மேனன்
இதன்பிறகு இரு தரப்பினரும் பாரில் இருந்து வெளியே சென்ற நிலையில் ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் மிதமிஞ்சிய போதையில் அலியார் ஷாவின் காரை நிறுத்தி, அவரை வெளியே இழுத்து தங்கள் காரில் கடத்திச் சென்றனர். பின்பு அவரை கடுமையாகத் தாக்கி ஓரிடத்தில் இறக்கிவிட்டுச் சென்றனர். இது குறித்து ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் போலீசில் புகார் கொடுத்தார்.
3 பேர் கைது
அதன்பேரில் லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 323 (தன்னார்வமாக காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் லட்சுமி மேனனின் நண்பர்களான அனீஸ், மிதுன் மோகன், மற்றும் சோனாமோல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். லட்சுமி மேனன் தலைமறைவானதால் அவரை பிடிக்க முடியவில்லை.
34
லட்சுமி மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு
இதன்பிறகு லட்சுமி மேனன் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவரை 17ம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த லட்சுமி மேனன், ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைதான லட்சுமி மேனனின் நண்பரான மிதுன் மோகன் கூலிப்படையை சேர்ந்தவர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கூலிப்படையுடன் தொடர்புடைய அவருடன் லட்சும் மேனனுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது? மிதுன் மோகன் கூலிப்படையாக இதற்கு முன்பு என்னென்ன குற்றங்களை செய்துள்ளார்? அவருக்கு லட்சுமி மேனன் உடைந்தையாக இருந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சுமி மேனனின் உண்மை முகம் என்ன? என்பது தீவிர விசாரணைக்கு பிறகே தெரியவரும்.