Nayanthara Movies : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொட்டு வந்த சிகரங்கள்!

First Published | Jul 4, 2022, 4:46 PM IST

Lady Super Star Nayanthara journey in Tamil Cinema- Quick-Rewind : தமிழக சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்து வந்த பாதை குறித்த சிறு தொகுப்பை இங்கு காணலாம்...

nayanthara

கன்னட பைங்கிளியான நயன்தாரா கல்லூரியில் படிக்கும் போதே மாடலாக பணிபுரிந்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் சத்யன்அந்திகாட் என்பவரின் இயக்கத்தில் சில மாடலிங் பணிகளை மேற்கொண்டார். இந்த அறிமுகம் மூலம் இயக்குனர் சத்யன்  அவருக்கு மனசினக்கரே என்னும் படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

nayanthara

முதலில் திரை உலகம் குறித்து அச்சம் கொண்ட நயன்தாரா பின்னர் தனது பெற்றோரின் சம்மதத்துடன் திரையுலகத்திற்குள் அடியெடுத்து வைத்தார். நயன்தாரா சினிமாவில் நடிக்க இருப்பதை அவரது உறவினர்கள் விரும்பவில்லை, அவரை உற்சாகப்படுத்தவில்லை என்பதை இயக்குநர் சத்யன் ஒருமுறை தனது பேட்டியில் கூறி இருந்தார். இவற்றை எல்லாம் மீறிதான் நயன்தாரா சினிமாவுக்குள் நுழைந்தார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அப்போது அவர் பெயர் டயானா.

Tap to resize

nayanthara

ஆரம்பமே அதிரடியாக அமைந்தது நயன்தாராவுக்கு, தமிழில் ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா அதன் பின்னர் சந்திரமுகியில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியானார். இந்த இரு படங்களும் ஒரே வருடத்தில் வெளியானது இதை எடுத்து விஜய்யின் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிட்டார் நயன்தாரா. சூப்பர் நாயகர்களுடன் ஜோடி சேர்ந்த போதிலும் தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை நயன்தாராவிற்கு அப்போது அசின், த்ரிஷா என போட்டி அதிகமாகவே இருந்தது.

மேலும் செய்திகளுக்கு... பிரம்மாண்ட வெற்றிவிழா நடத்த உள்ள உதயநிதி... விஜய் முதல் கமல் வரை யார் யாரெல்லாம் கலந்துக்க போறாங்க தெரியுமா?

nayanthara

சிவகாசியை தொடர்ந்து ரஜினி நடித்த சிவாஜி படத்திலும் அறிமுக பாடலுக்கு நடனமாடி இருந்தார் நயன்தாரா. சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தமிழில் பில்லாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் யாரடி மோகினி படம் இவருக்கு சிறந்த கம்பக்காக இருந்தது. அதே ஆண்டு குசேலன், ஏகன் போன்ற படங்களில் தோன்றினார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததால் இவரும் டாப் 10 ஹீரோயின்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார்.

மேலும் செய்திகளுக்கு... வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !

nayanthara

பின்னர் கொழுக்கொழு என இருந்த நயன்தாரா சில தந்திரங்கள் மூலம் தனது உடல் எடையை குறைத்து பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு ஒல்லி பெல்லி ஆனார். வில்லு படத்தில் இவரது கவர்ச்சி கண் கூசும் அளவிற்கு இருந்தது. இருந்த போதிலும் அதுவும் இங்கு எடுபடவில்லை. ஆதவன், கோவா, பாஸ் என்கிற பாஸ்கரன் எதிர்நீச்சல், ராஜா ராணி, ஆரம்பம், நண்பேண்டா, மாசு என்கிற மாசிலாமணி என வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுத்த போதிலும் நயன்தாராவின் படங்கள் பெரிய வெற்றியை கண்டதாக தெரியவில்லை. இதற்கிடையே நடிகர் சிம்புவுடன் ஆன காதல் சர்ச்சை, இதைத்தொடர்ந்து நடன இயக்குனர் பிரபுதேவா உடனான காதல் சர்ச்சை என ஒரு கட்டத்தில் முடங்கி தான் விட்டார் நயன்தாரா.
 

மேலும் செய்திகளுக்கு... முதல் படத்திலேயே இப்படியா... சூப்பர் கண்ணா! - மாதவனின் ராக்கெட்ரி படம் பார்த்து பிரம்மித்துப்போன சூப்பர்ஸ்டார்

nayanthara

விசுவாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடந்திருந்தால் இதற்கு முன்னதாக நாய்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களத்தை தேர்வு செய்து வரும் நயன்தாரா கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலை யுதிர் காலம் போன்ற படங்கள் மூலம் அதிரடி காட்டி தனது மீதான கண்ணோட்டத்தை ரசிகர்கள் மத்தியில் மாற்றிவிட்டார். தொடர் பெண்மை சார்ந்த படங்கள் நயன்தாரா மீதான ஒரு இமேஜை கிரியேட் செய்துவிட்டது. இதன் பின்னர் அவர் எந்த படத்தில் நடித்தாலும் கதாநாயகிக்கு  ஒரு முக்கியமான இடம் கிடைக்கும் என ரசிகர்கள் நம்பி விட்டனர்.  இதனால் விஜய் நடிப்பில் வந்த பிகில், ரஜினி நடிப்பில் வந்த தர்பார் உள்ளிட்ட படங்களில் நயன்தாராவுக்கு போதுமான ரோலை கொடுக்கவில்லை என இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. நயன்தாராவை பொறுத்தவரை அவர் சின்ன நடிகராக இருந்தாலும் சரி டாப் டென் நடிகராக இருந்தாலும் சரி ஜோடி சேர ஒருபோதும் அவர் தயங்கியதில்லை ஜீவா முதல் உதயநிதி வரை அறிமுக நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார் நயன்தாரா.

nayanthara

காதல் தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வந்த நயன்தாராவிற்கு ஒரு ஆறுதலாக அமைந்த படம் தான் நானும் ரவுடிதான் இந்த படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கிடைத்த அன்பும், ஆதரவும் நயன்தாராவை தேற்றியது என்றே கூறலாம். அதன் பின்னர் அதற்கு ஓகே சொன்ன நயன்தாரா சரியான கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் என்றும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவே இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் நல்ல பெயரை பெற்று கொடுத்தது இந்த படத்தோடு பாலிவுட்டுக்குள் நுழைந்த நயன்தாரா அங்கு ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ஏழு வருடங்களுக்கு மேலாக காதல் உறவில் இருந்த விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணம் ராஜா வீட்டு கல்யாணம் போல கோலாகலமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் தாலி எடுத்துக் கொடுக்க நடைபெற்ற திருமணத்தில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு கோலாகலப்படுத்தினர்.

Latest Videos

click me!