ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கோமாளி. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஒருவர், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி என்னென்ன சிக்கல்களையெல்லாம் சந்திக்கிறார் என்பதை இப்படத்தில் நகைச்சுவையுடன் காட்சிப்படுத்தி இருந்தார் பிரதீப்.
இப்படத்தில் ஜெயம் ரவி உடன் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ராமர், பொன்னம்பலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார்.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த இயக்குனர் பிரதீப், கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்க உள்ளதாக அறிவித்தார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயரிக்கிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ரவீனா ரவி மற்றும் இவானா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு லவ் டுடே என பெயரிடப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவெ விஜய் நடிப்பில் லவ் டுடே என ஒரு படம் ரிலீசாகி உள்ளதால், நடிகர் விஜய்யிடமும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடமும் அனுமதி பெற்று இப்படத்திற்கு தலைப்பு வைத்ததாக அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.