சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா
அண்மையில் அன்னப்பூரணி என்ற படத்தில் ப்ராமண வீட்டு பெண்ணாக நடித்திருந்த நயன்தாரா, அந்த படத்தில் வரும் ஒரு கட்சியில், சமைக்கும் முன் புர்கா அணிந்து தொழுகை செய்வது போன்ற காட்சிகளில் நடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். அதாவது OTTயில் வெளியான அன்னப்பூரணி படத்தையே அதிலிருந்து நீக்கும் அளவிற்கு பிரச்சனை வளர்ந்தது. அதே போல கடந்த 2011ம் ஆண்டு பிரபல நடிகர் பிரபுதேவாவுடன் இணைத்து நயன்தாரா கிசுகிசுக்கப்பட்டார்.
இது எந்த அளவிற்கு சென்றது என்றால், பிரபுதேவா அவரது மனைவி ராம்லத்தை விவாகரத்து செய்யும் அளவிற்கு பிரச்சனை பெரிதானது. அதற்கு முன்னதாக பிரபல நடிகர் சிம்புவுடன் நயன்தாரா காதல் வயப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் பரவியது. அதற்கு ஏற்றார் போல "வல்லவன்" படத்தில், நயன்தாராவுடனான காட்சிகளில் எல்லை மீறிய கவர்ச்சியை புகுத்தினார் அப்படத்தின் இயக்குனர் சிலம்பரசன் என்பது குறிப்பிடத்தக்கது.