தமிழ் திரையுலகில் எந்தவித பின்புலமும் இன்றி அறிமுகமாகி இன்று கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.
இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24
Ajith lamborghini car
விடாமுயற்சியை தொடர்ந்து நடிகர் அஜித் கைவசம் உள்ள மற்றொரு படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
இப்படி ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் அஜித், தனக்கு டைம் கிடைக்கும்போதெல்லாம் பைக் ரைடிங், கார் ரேஸ் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
மிகப்பெரிய கார் பிரியரான இவர் பல சொகுசு கார்களை தன் வீட்டில் வாங்கி குவித்து வைத்துள்ளார். இதுபோதாதென்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லம்போகினி காரை வாங்கினார் அஜித். சிகப்பு நிறத்தில் அவர் வாங்கிய அந்த காரின் விலை ரூ.9 கோடி. அதனை துபாயில் வைத்திருக்கிறார் அஜித்.
44
Porsche GT3 RS car Price
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புது கார் ஒன்றை வாங்கி உள்ளார் ஏகே. இம்முறை போர்சே நிறுவனத்தின் GT3 RS மாடல் காரை சொந்தமாக வாங்கி உள்ளார் அஜித். அந்த காரின் விலை ரூ.3.51 கோடி இருக்குமாம். இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 விநாடிகளில் எட்டிவிடுமாம். இந்த காரின் டாப் ஸ்பீடு 296 கிமீ. இந்த காரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஷாலினி, அவர் கார், ஸ்டைல் மட்டுமின்றி என் இதயத்தையும் பெற்றுவிட்டார் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.