Published : Sep 13, 2024, 03:00 PM ISTUpdated : Sep 13, 2024, 10:44 PM IST
இயக்குனர் செல்வமணி, இளையராஜா போட்ட டியூனை அடுத்தடுத்து... ரிஜெக்ட் செய்த நிலையில் கோவத்தில் ஒரே நாள் இரவில் சூப்பர் ஹிட் பாடலை இளையராஜா கம்போஸ் செய்து கொடுத்தாராம். அது என்ன பாடல் தெரியுமா?
திரைப்படம் என்றால் அதில் பாடல்கள் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவது வழக்கமான ஒன்று தான். இது போன்ற பாடல்கள் ரசிகர்களுக்கு படம் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்துவதோடு குதூகலப்படுத்தும். அதே போல் போர் அடிக்காமல் இருக்கவும் இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களில் பாடல்களை வைப்பது உண்டு. 90-களில் ஒரு படத்தில் அதிகபட்சமாக 4 மற்றும் 5 பாடல்களே இடம்பெறும். 70,80-களில் ஒரு படத்தில் 10-க்கும் மேற்ப்பட்ட பாடல்கள் கூட இடம்பெறுவது உண்டு. பாடலிலேயே அந்த படத்தின் முழு கதையையும் கூறி விடுவார்கள் இயக்குனர்கள்.
24
Actor Captain Vijayakanth
சமீப காலமாக சில இயக்குனர்கள் திரைப்படங்களில் பாடல்கள் இல்லாமல் இருக்க கூட படம் இயக்குகிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம். இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில்... விஜயகாந்த் நடிப்பில் 1991-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கேப்டன் பிரபாகரன்'. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இந்த படத்தில் இரண்டே இரண்டு பாடல் மட்டுமே இடம்பெற்றது. மேலும் இந்த படத்தின் மூலம் தான் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் நடிகை ரூபினி கதாநாயகியாக நடித்திருந்தார். லிவிங்ஸ்டன், சரத்குமார், ரம்யா கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைஞானி இசையமைத்திருந்த இந்த படத்தில், BGM மற்றும் பாடல்கள் என இரண்டுமே அதிகம் பேசப்பட்டது.
இந்த படத்தில் மன்சூர் அலி கான் நடித்த வீரபத்திரன் என்ற வில்லன் கதாபாத்திரம், சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதே போல் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஜயகாந்தின் கதாபாத்திரமும் முக்கிய போராளி ஒருவரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. எனவே தான் அந்த போராளியின் பெயரையே இப்படத்திற்கு வந்தார் ஆர்கே செல்வமணி வைத்தார். 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் கிட்டத்தட்ட 300 நாட்களுக்கும் மேல் ஓடி வசூல் சாதனை செய்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற 'ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்த ஒரு சுவாரிஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
44
பொதுவாகவே இளையராஜா, டியூன் அமைத்தால் அதை யாரும் எளிதில் ரிஜெட் செய்ய மாட்டார்கள். ஆனால், இளையராஜா இது விஜயகாந்தின் 100-வது படம் என்பதால்... இரவு பகல் பாராமல் உழைத்தாராம். குறிப்பாக "ஆட்டமா தேரோட்டமா" பாடலுக்கான டியூன் அமைத்து இளையராஜா அனுப்பியது அதை 20-வது முறைக்கு மேல் ரிஜெக்ட் செய்துள்ளார். பின்னர் இளையராஜா கோவத்தில் செல்வமணிக்கு போன் பண்ணும் போது... " ஆர்.கே.செல்வமணி... அண்ணா நான் சோலே மாதிரி ஒரு படம் பண்றேன்... அதுக்கு மெகபூபா மாதிரி ஒரு பாட்டு வேணும், நாளைக்கு நைட் ஷூட்டிங் அதுக்குள்ளே டியூன் அனுப்பிடுங்க அப்படின்னு சொல்லிட்டு போனை வைத்துள்ளார். இதை முதல்லயே சொல்லவேண்டிய தானே என புலம்பிக்கொண்ட போனை வைத்த இளையராஜா, நைட்டோட நைட்டா டியூன் அமைத்து... பெரிய சுடனை வச்சு பாடல்லிரிக்ஸ் எழுதி முதல்ல பிளைட்ல BGM அனுப்பிட்டு, காலையில சொர்ணலதாவை வைத்து பாடலை ரெக்கார்ட் பண்ணி மதிய பிளைட்ல பாட்டை அனுப்பி வச்சாரம். அவரச அவசரமா ஒரே நாள்ல உருவான இந்த பாட்டு தான் பின்னர் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.