Kavignar Vaali used same lyrics for 2 Songs : பாடலாசிரியர் வாலி, தனக்கு மிகவும் பிடித்த பாடல் வரி ஒன்றை 2 வெவ்வேறு பட பாடல்களில் பயன்படுத்தி அந்த இரண்டு பாடல்களுமே ஹிட்டாகி உள்ளனர்.
தமிழ் சினிமா ரசிகர்கள் காலம் கடந்து கொண்டாடும் பல்வேறு மாஸ்டர் பீஸ் பாடல்களை கொடுத்தவர் வாலி. இவர் இளையராஜா இசையில் ஏராளமான ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதி இருக்கிறார். அப்படி இளையராஜா இசையில் வாலி எழுதிய இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களில் ஒரே பாடல் வரிகள் இடம்பெற்று இருப்பதைப் பற்றியும், அந்த வரிகளை எவ்வளவு அழகாக அவர் பயன்படுத்தி இருக்கிறார் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.
25
Lyricist Vaali
வாலி - இளையராஜா கூட்டணியில் உருவான வெற்றிப்பாடல்களில் கல்யாண மாலை பாடலும் ஒன்று. இப்பாடல் கடந்த 1989-ம் ஆண்டு வெளிவந்த புதுப் புது அர்த்தங்கள் படத்தில் இடம்பெற்று இருக்கும். இப்படத்தை பாலச்சந்தர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ரகுமான் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக கீதாவும் நடித்திருந்தனர். இப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த கல்யாண மாலை பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி இருந்தார்.
35
Pudhu Pudhu Arthangal Song
அப்பாடலுக்கு வாலி வரிகளை எழுதி இருந்தார். அதில், ‘கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் அடைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா... சோலை மயில் தன்னை சிறைவைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா’ என்கிற வரியை எழுதி இருப்பார் வாலி. இந்த வரிகள் வாலிக்கு மிகவும் பிடித்துப்போனதால் இதே வரிகளை கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்த சின்னத்தம்பி படத்திலும் ஒரு பாடலுக்கு அதே உவமையுடன் பயன்படுத்தி இருப்பார் வாலி.
அப்படத்தில் இடம்பெறும் குயிலப்புடிச்சி கூண்டில் அடச்சு பாடலில் தான் அந்த வரிகளை பயன்படுத்தி இருப்பார் வாலி. இதில் ‘குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்; மயிலப்புடிச்சு கால ஒடச்சு ஆடச்சொல்லுகிற உலகம்’ என எழுதி இருப்பார் வாலி. இந்த இரண்டு பாடல்களுக்குமே இசையமைத்தது இளையராஜா தான். அதேபோல் இந்த இரண்டு பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடி இருந்தார் என்பது கூடுதல் சிறப்பு.
55
Secret Behind Chinna Thambi song
சின்னத்தம்பி திரைப்படத்தை பி வாசு இயக்கி இருந்தார். இப்படத்தில் நாயகனாக பிரபுவும் நாயகியாக குஷ்புவும் நடித்திருந்தார்கள். இதில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. நடிகர் பிரபு மற்றும் குஷ்புவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது சின்னத்தம்பி தான். இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.