
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்த பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. சென்னையைச் சேர்ந்த இவர்... எத்திராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, மாடலிங் துறையில் கால் பதித்து, சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு, 'ஆத்தா உன் கோயிலிலே' திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கஸ்தூரி, 1992 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். பின்னர் ஃபெமினா மிஸ் மெட்ராஸ் பியூட்டி பேஜன்டிலும் பங்கேற்று வெற்றி பெற்றார். அழகி பட்டம் நடிகை கஸ்தூரியை திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சக்கரவர்த்தி, ராசாத்தி வரும் நாள், கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை, சின்னவர், உரிமை ஊஞ்சலாடுகிறது, செந்தமிழ் பாட்டு, ராக்காயி கோயில், உள்ளிட்ட ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். கடந்த ஆண்டு தமிழரசன், ராயர் பரம்பரை, ஸ்டிக்கர், போன்ற படங்களில் நடித்திருந்த கஸ்தூரி... இந்த ஆண்டு 'சிம்பா' என்கிற தெலுங்கு படத்தில் நடித்த முடித்துள்ளார். கூடிய விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
120 கோடி பட்ஜெட்.. ராயன் வெற்றிக்கு பின் தனுஷ் இயக்கும் பிரம்மாண்ட படம் - ஹீரோ இவரா?
நடிகை கஸ்தூரியை பொறுத்தவரை மனதில் பட்டத்தை... எந்த ஒரு ஒளிவுமறைவு இன்றி வெளிப்படையாக பேசுபவர். அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி எப்போதுமே அவர் கவலைப்பட்டது இல்லை. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக கேரள திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசியுள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்னர், பல நடிகைகள் தங்களுடைய திரையுலக வாழ்க்கையில் நடந்த பாலியல் வன்முறை, பாலியல் அத்துமீறல் மற்றும் பலவந்தப்படுத்தி நடிகர் - இயக்குனர் தங்களை பிடிப்பது, தவறாக பேசி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பது போன்ற பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த அறிக்கையில் இடம்பெற்ற நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு தற்போது விசாரணை சென்று கொண்டிருக்கும் நிலையில், நடிகை கஸ்தூரி திரை உலகில் அறிமுகமான இரண்டாவது படத்திலேயே இயக்குனர் தன்னை அட்ஜஸ்ட்மென்ட் க்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சமீபத்தில் இவர் youtube சேனலுக்கு இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், பேசும்போது... "நான் நடித்த இரண்டாவது படத்திலேயே அந்த படத்தின் இயக்குனர் தன்னிடம் தகாத முறையில் பேசி, அட்ஜஸ்ட்மெண்ட் செய்யுமாறு கூறினார். எனக்கு அவரின் நோக்கம் புரிந்ததால், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அனைவர் முன்பும் அசிங்கப்படுத்தும் விதமாக திட்டினேன். நான் அவருக்கு ஒத்துழைக்காததால் என்னை அந்த படத்தில் இருந்து தூக்க திட்டமிட்டார். அதற்காக அவர் காரணங்களையும் தேடிக் கொண்டிருந்தார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட பின்னரும், தன்னை அந்த படத்தில் நடிக்க வைக்க கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார். நான் மிகவும் ஒல்லியாக இருப்பதாக சுட்டிக்காட்டி... அந்த கதாபாத்திரத்திற்கு செட்டாக மாட்டேன் என கேவலமான காரணத்தை கூறி அந்த படத்தில் இருந்து என்னை தூக்கி விட்டார்.
பாத்திமா பாபுவை மிரட்டியது யார்? திருமண வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
பொதுவாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகும் போதே... அந்த கதாபாத்திரத்திற்கு இந்த நடிகை செட் ஆவாரா? அவரின் உடல்வாகு எப்படி இருக்கிறது? என்பது ஆடிஷனிலேயே தெரிந்துவிடும். அப்போது அவருடைய கண்ணுக்கு நான் ஒல்லியாக இருப்பது தெரியவில்லை... அதே போல் முதல் கட்ட படப்பிடிப்பில் நடிக்கும் போது அவருக்கு நான் ஒல்லியாக இருப்பது தெரியவில்லை, ஆனால் அவரின் அட்ஜஸ்மெண்டுக்கு நான் ஒத்துழைக்காமல் போன பின்னரே நான் ஒல்லியாக இருப்பது அவருக்கு தெரிந்தது. அவர் நான் சரியாக டான்ஸ் ஆடவில்லை, நடிக்கவில்லை, என கூறியிருந்தால் கூட என் மனது சமாதானம் ஆகி இருக்கும். ஆனால் அவர் இப்படி ஒரு கேவலமான காரணத்தை கூறி என்னை வெளியேற்றும்போது... நான் மட்டுமல்ல சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சிலரும் என்னோடு சேர்ந்து சிரித்துவிட்டனர்.
நான் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண். என்னுடைய அம்மா ஒரு வழக்கறிஞர், எனக்கே திரையுலகில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கிறது. ஒரு சில பெண்கள் சினிமாவையே நம்பி வாழ்வாதாரத்தை தேடி இங்கு வருகிறார்கள். அவர்களை இது போன்ற ஆட்கள் கோழிக்குஞ்சு போல் நசுக்கி விடுவார்கள் என நடிகை கஸ்தூரி ஆதங்கத்தோடு இந்த பேட்டியில் பேசியுள்ளார். எனவே சினிமாவில் அறிமுகமாகும் பெண்கள் தைரியமாகவும், மிகுந்த ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!