ஹீரோயின் வயதில் மகள்கள் இருந்தாலும்... என்றும் இளமையோடு ஜொலிக்கும் 5 தமிழ் சினிமா நடிகைகள்!!

First Published | Sep 28, 2021, 7:20 PM IST

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் ஹீரோயினாக கலக்கிய சில நடிகைகளுக்கு தற்போது, ஹீரோயின் வயதில் மகள்கள் இருந்தாலும், உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக காட்சியளிக்கிறார்கள். இவர்களின் 5 ஹீரோயின் பற்றிய புகைப்பட தொகுப்பு இதோ...

குஷ்பு (Kushboo ):

நடிகை குஷ்புவின் தற்போதைய தோற்றத்தை பார்த்து ஆச்சயர்யப்படாதவர்கள் யாரும் இல்லை... அந்த அளவிற்கு செம்ம பிட்டாகவும், ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார். 30 வயது குறைந்து, மீண்டும் ஹீரோயின் லுக்கில் சமீப காலமாக சில புகைப்பங்களை வெளிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் தாறு மாறாக வைரலாகி வருகிறது.

நதியா (Nadhiya )

'பூவே பூச்சூடவா' படத்தில் அறிமுகமானத்தில் இருந்து இப்போது வரை வாடாத மலர் போல, அழகில் மின்னிக் கொண்டிருக்கிறார் நடிகை நதியா.  80 களில் ரஜினிகாந்த், விஜயகாந்த், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார். தற்போது இவருக்கு ஹீரோயின் போல் இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்களுக்கு அக்கா போல் காட்சியளிக்கிறார்.

Tap to resize

மதுபாலா (Madhoo bala):

'அழகன்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மதுமிதா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த மதுவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என வளைத்து வளைத்து, அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனம் ஈர்த்தார். இவரும் திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒதுங்கினாலும், சமீப காலமாக படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது வரை செம்ம பிட்டாக இரண்டு மகள்கள் இருந்தாலும் யங் ஹீரோயின் போல் காட்சியளிக்கிறார்.

லிஸி (lissy ):

தென்னிந்திய சினிமாவில், பிரபல இயக்குனராக இருக்கும்  பிரியாதர்ஷன் மனைவியும், நடிகையுமான லிஸி... தற்போது தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் ஹீரோயினாக இருக்கும் மகள் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கே டஃப் கொடுக்கும் விதமாக செம்ம ஸ்டைலிஷாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan):

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு மகள் இல்லை என்றாலும், 50 வயதுக்கு மேல் ஆகியும், அதே அழகு... அதே ஸ்டைலீஷுடன் ஹீரோயின் போல் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். மாடர்னாக உடைகள் அணிவதிலும் அம்மணியை அடிச்சிக்க முடியாது என்பது போல் இவரது ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பார்த்து வியப்பவர்கள் பலர்.
 

Latest Videos

click me!