கர்ப்பமான பின்னரே சித்தார்த்தை கரம்பிடித்தாரா கியாரா அத்வானி...? புது குண்டை தூக்கிப்போட்ட பாலிவுட் பிரபலம்

Published : Feb 12, 2023, 02:42 PM IST

கர்ப்பமான பின்னர் திருமணம் செய்துகொள்வது பாலிவுட்டில் புது டிரெண்டாக உள்ளது என சித்தார்த் - கியாரா ஜோடி பற்றி பிரபலம் ஒருவர் டுவிட் செய்துள்ளார்.

PREV
15
கர்ப்பமான பின்னரே சித்தார்த்தை கரம்பிடித்தாரா கியாரா அத்வானி...? புது குண்டை தூக்கிப்போட்ட பாலிவுட் பிரபலம்

பாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளான சித்தார்த்த் மல்கோத்ராவும், கியாரா அத்வானியும், பல வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரது காதலுக்கும் குடும்பத்தினர் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து கடந்த பிப்ரவரி 7-ந் தேதி குடும்பத்தினர் முன்னிலையில், கியாரா அத்வானியை கரம்பிடித்துக்கொண்டார் சித்தார்த் மல்கோத்ரா.

25

இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திருமணம் முடிந்த சில மணிநேரத்திலேயே சித்தார்த் - கியாராவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

35

திருமணம் முடிந்த கையோடு தன் காதல் மனைவியை டெல்லிக்கு அழைத்து சென்றார் சித்தார்த் மல்கோத்ரா. தற்போது அங்குள்ள சித்தார்த்தின் பெற்றோர் வீட்டில் தான் இருவரும் தங்கி உள்ளனர். தன் காதல் மனைவிக்காக மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பங்களா ஒன்றையும் கட்டி வருகிறாராம் சித்தார்த். அதன் வேலைகள் முடிந்தது அந்த கடலோர பங்களாவில் இருவரும் குடியேறபோகிறார்களாம்.

இதையும் படியுங்கள்... பாகுபலி நடிகர் ராணா மீது பாய்ந்த கிரிமினல் வழக்கு! ரவுடிகளை ஏவி மிரட்டியதாக பரபரப்பு புகார்..!

45

இந்நிலையில், சித்தார்த் மல்கோத்ரா - கியாரா அத்வானி குறித்து பாலிவுட் பிரபலம் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார். அதன்படி பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகராக வலம் வரும் கமால் ஆர் கான் (கே.ஆர்.கே) என்பவர் போட்டுள்ள டுவிட் தான் தற்போது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

55

அவர் அந்த டுவிட்டில் பதிவிட்டுள்ளதாவது : “கர்ப்பமான பின்னர் திருமணம் செய்துகொள்வது பாலிவுட்டில் புது டிரெண்டாக உள்ளது. பாலிவுட்டில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடி கூட இதே டிரெண்டை தான் பாலோ செய்து உள்ளது” என பதிவிட்டு இருந்தார். அவர் சித்தார்த் - கியாரா அத்வானி ஜோடியை பற்றிதான் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக கண்டுபிடித்த நெட்டிசன்கள், அவர் பப்ளிசிட்டிக்காக இதுபோன்று சர்ச்சைக்குரிய பதிவுகளை போட்டு வருவதாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மறுவெளியீட்டில் வசூல் சாதனை நிகழ்த்திய பாபா... படக்குழுவினருடன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories