குஷ்பூ மகள் திருமணம்... ஒட்டுமொத்த கோலிவுட்டும் Goa-ல தான் இருக்கு - வைரலாகும் போட்டோஸ்

Published : Jun 25, 2026, 01:27 PM IST

Khushbhu Daughter Avantika : குஷ்பூ - சுந்தர் சி ஜோடியின் மகளான அவந்திகாவின் திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ள ஏராளமான பிரபலங்கள் கோவா சென்றுள்ளனர்.

PREV
16
Khushbhu Daughter Avantika Wedding

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குஷ்பூவின் மகள்கள் இருவருமே குண்டாக இருந்தனர். அதனால் சினிமா விழாக்களில் அவர்கள் கலந்துகொண்டபோது கடுமையான கேலி, கிண்டல்களை எதிர்கொண்டு வந்தனர். ஆனால் கொரோனா லாக்டவுன் சமயத்தில் தன்னுடைய அம்மா உடன் சேர்ந்து அவர்களும் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார்கள்.

26
சினிமாவில் குதித்த குஷ்பூ மகள்கள்

அதன் பலனாக குஷ்பூவின் இரண்டு மகள்களுமே தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளனர். குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அண்மையில் அவர் தயாரித்த டபுள் ஆக்குபென்சி என்கிற திரைப்படம் திரைக்கு வந்தது. அதேபோல் குஷ்பூவின் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அவர் அட்டாக்கர் என்கிற படத்தில் நடிக்கிறார். இதில் நாயகனாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தொடங்கியது.

36
குஷ்பூ மகள் திருமணம்

இந்த நிலையில், குஷ்பூவின் மூத்த மகள் அவந்திகாவிற்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள ஏராளமான திரைப்பிரபலங்கள் கோவாவிற்கு படையெடுத்து வருகிறார்கள். அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு தடபுடல் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார் குஷ்பூ. அப்போது எடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

46
நாகார்ஜுனா பங்கேற்பு

குஷ்பூ மகள் திருமணத்தில் நடிகர் நாகார்ஜுனாவும் கலந்துகொண்டுள்ளார். அவர் தன்னுடைய மனைவி அமலா உடன் கோவாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு வந்த நாகார்ஜுனாவுடன் நடிகை குஷ்பூ ஜாலியாக பேசி மகிழ்ந்த அழகிய தருணம் தான் இது.

56
கோவாவில் குவிந்த கோலிவுட் ஸ்டார்ஸ்

இதுதவிர நடிகை குஷ்பூவின் நெருங்கிய தோழிகளான நடிகைகள் பூர்ணிமா பாக்கியராஜ், சரிதா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஆகியோரும் இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர். இதுதவிர இயக்குநர் பாக்கியராஜ் தன்னுடைய ஃபேமிலியோடு கலந்துகொண்டுள்ளார்.

66
யார்.. யாரெல்லாம் வந்திருக்காங்க தெரியுமா?

அதேபோல் நடிகை திரிஷாவும் இந்த திருமண விழாவில் கலந்துகொள்ள கோவா சென்றுள்ளாராம். இதுதவிர நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தியும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். ஷ்ரவன் - அவந்திகா ஜோடியின் திருமணம் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories