ஜோக்கராக தொடங்கி தற்போது ஹீரோவாக வலம்வரும் சிவகார்த்திகேயன், இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, 1985 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். இவரது தந்தை போலீஸ் அதிகாரி. இன்ஜினியரிங் மாணவரான இவர், தற்செயலாக கலந்துகொண்ட நிகழ்ச்சி தான் 'கலக்கப் போவது யாரு'.
28
இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கி வெற்றிவாகை சூடிய சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) பின்னர் தன்னுடைய திறமையால் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறினார்.
38
இதைத்தொடர்ந்து டான்ஸ் திறமையை வெளிப்படுத்த ஜோடி நம்பர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அது மட்டுமின்றி, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
48
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் (Dhanush) நடித்த 3 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானாலும், மெரினா திரைப்படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
58
இதையடுத்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan).
68
தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான், டான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுதவிர தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை நடிக்க உள்ளார்.
78
நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என முன்னணி பிரபலமாக மின்னி வருகிறார் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் எழுதிய அரபிக் குத்து என்கிற பாடல் அண்மையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
88
ஜோக்கராக தொடங்கி தற்போது ஹீரோவாக வலம்வரும் சிவகார்த்திகேயன், இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.