“கே.ஜி.எஃப் - 2” ஷூட்டிங்கில் இணைந்தார் பிரகாஷ் ராஜ்... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!

இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கே.ஜி.எஃப் -2 படத்தின் ஷூட்டிங் இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா? என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப்.
பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் வெற்றியை அள்ளியது.
கன்னட சினிமாவில் முதல் 100 கோடி வசூல் என்று அசத்திய இந்த திரைப்படத்தால், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் யாஷ் சூப்பர் ஹீரோவாக தெரிய ஆரம்பித்தார்.
இந்த படத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா காரணமாக ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அந்த படத்தின் இரண்டாவது பாகமான கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடித் தீர்த்துவருகின்றனர்.
கே.ஜி.எஃப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான அதிரா பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த படத்தின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியான போது, அதை ரசிகர்கள் வேற லெவலுக்கு ட்ரெண்ட் செய்தனர்.
தற்போது 5 மாதங்களுக்கு பிறகு இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கின் இன்று ஆரம்பமாகியுள்ளது.
மீண்டும் தொடங்கியுள்ள படப்பிடிப்பில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகின்றன.

Latest Videos

click me!