4 ஆம் நிலை புற்றுநோயால் போராடும் KGF பட நடிகர்..! மருந்துக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் இத்தனை லட்சமா?

First Published | Aug 27, 2022, 1:54 PM IST

நடிகர் யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, KGF படத்தில் காசிம் சாச்சா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ் ராய், 4 ஆவது நிலை புற்றுநோயால் அவதி பட்டு வருவதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

KGF  பட நடிகர் ஹரிஷ் ராய், முதல் முறையாக புற்றுநோயுடன் போராடி வரும் தகவலை பிரபல ஊடகம் ஒன்றில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய தொண்டை பகுதியில் ஒரு சிறிய கட்டி, இருப்பதை முதலில் கண்டு பிடித்ததாகவும், இது குறித்து மருத்துவரை அணுகியபோது, அறுவை சிகிச்சை செய்ய கூறியதாகவும், குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருந்ததால் அப்போது செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார். 
 

மேலும் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தால் குரல் பாதிக்கப்படுமா நான் பயந்தேன். அதனால் நான் KGF படத்தை நடித்து முடித்த பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தேன். நான் அறுவை சிகிச்சையை தாமதப்படுத்தி கொண்டே சென்றதால்,  என் புற்றுநோய் நுரையீரலுக்கு பரவியது,  என்று ஹரிஷ் கன்னட யூடியூப் சேனல் ஒன்றிக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 

மேலும் செய்திகள்: ராஜா ராணி சீரியலில் இருந்து திடீர் என விலகும் வில்லி அர்ச்சனா..! அவருக்கு பதில் நடிக்க போவது யார் தெரியுமா?
 

Latest Videos


lung cancer

கேஜிஎஃப் திரைப்படத்தில் நடிக்கும் போது, ​​ஹரிஷ் ராய்க்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ​​உடனடியாக புற்றுநோக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால், பெங்களூருவில் உள்ள அரசு புற்றுநோய் நிறுவனமான கித்வாய்க்கு அவரது நண்பர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அங்கு அவருக்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் கீமோதெரபி சிகிச்சையையும் தொடர்ந்து செய்துகொண்டார். எனினும் தற்போது அவர் புற்றுநோயின்  நான்காவது கட்டத்தை எட்டியுள்ளதாக மருத்துவர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

blood cancer

பின்னர் ஹரிஷுக்கு புதிய சிகிச்சை முறைகள் சிலவற்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்த  நிலையில், அந்த சிகிச்சைக்கான செலவும் அதிகம் என்றாலும் தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு மாதத்திற்கு மட்டும் இந்த சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் செலவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். புற்று நோய்க்கான இந்த அட்வான்ஸ் சிகிச்சை முறையின் மூலம் இப்போது நன்றாக உணர்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிகிச்சைக்கு பணம் தேவை என்பதால் ஓய்வின்றி நடித்து வருகிறார் ஹரீஷ் ராய்.

மேலும் செய்திகள்: 'பாரிஜாதம்' பட ஹீரோயின்... நடிகர் பாக்யராஜ் மகள் சரண்யாவா இது? அடையாளமே தெரியலையே... லேட்டஸ்ட் போட்டோ!
 

இவரது நிலையை கண்டு, கண்டன திரையுலகை சேர்ந்த சில பிரபலங்கள்... இவரது சிகிச்சைக்கு உதவ முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. KGF படத்தில் நடித்த போது கழுத்தில் இருந்த வீக்கத்தை மறைக்க தாடி வளர்த்து இவர் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

click me!