தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். அதற்கு ரவி மோகன் ஸ்டூடியோஸ் என பெயரிட்டு உள்ளார். இந்த நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த விழாவில் தான் தயாரிக்க உள்ள இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் ரவி மோகன். அதில் ஒரு படத்தை அவரே இயக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ரவி மோகன்.
25
ரவி மோகன் ஸ்டூடியோஸ் துவக்க விழா
தன்னுடைய ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் துவக்க விழாவில் வெள்ளை நிற கோர்ட் சூட் அணிந்து வந்திருந்தார் ரவி மோகன். அவருடன் அவரது காதலியான கெனிஷா பிரான்சிஸ் வந்திருந்தார். அவரும் ரவி மோகனுக்கு மேட்சிங் ஆக தமிழ் எழுத்துக்கள் அச்சிட்ட வெள்ளை நிற புடவையில், வந்திருந்தார். அவர் தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த விழாவில் ரவி மோகனின் அம்மா மற்றும் அவரது அண்ணன் மோகன் ராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
35
ரவி மோகனை வாழ்த்திய பிரபலங்கள்
ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனம் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிவ ராஜ்குமார் மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கார்த்தியும், ரவி மோகனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்து பேசிய கார்த்தி, படம் தயாரிக்க வேண்டாம் என ரஜினி சார் சொன்னதால் தான் இதுவரை நான் அதுபக்கமே செல்லவில்லை என கூறிய கார்த்தி, ரவி இதற்காக நன்கு திட்டமிட்டு படத் தயாரிப்பில் இறங்கி உள்ளதாக கூறினார்.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் துவக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார். அவர் தற்போது ரவி மோகன் உடன் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார் ரவி மோகன். இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் இப்படத்தில் நடிக்கும் அதர்வா முரளி ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டு ரவி மோகனுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
55
ரவி மோகன் தயாரிக்கும் படங்கள் என்னென்ன?
ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ள 2 படங்களில் ஒன்றை கார்த்திக் இயக்குகிறார். இப்படத்திற்கு Bro Code என பெயரிட்டுள்ளனர். இதில் ரவி மோகன் ஹீரோவாக நடிக்க அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கிறார்கள். இதையடுத்து அவர் தயாரிப்பில் உருவாக உள்ள மற்றொரு படத்தின் பெயர் An Ordinaru Man. இப்படத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி இதன்மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார் ரவி மோகன். இந்த இரண்டு படத்திற்கான பூஜையும் இன்று போடப்பட்டது.