Keerthy Suresh Marriage Photo
நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டிலை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் வைத்து நடைபெற்றது. தன்னுடைய 15 வருட காதலை ரகசியமாகவே வைத்திருந்த கீர்த்தி சுரேஷ், கலாட்டா இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய் காதல் கதையை முதன்முறையாக கூறி இருக்கிறார்.
Keerthy Suresh Husband Antony Thattil
அதில்,”எங்கள் உறவை வெளிப்படுத்த விருப்பமில்லை. ரகசியமாக வைத்திருக்கவே விரும்பினேன். யாருக்கும் தெரியாது. சினிமா துறையில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். சமந்தா, ஜெகதீஷ் ஆகியோருக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். அட்லி, பிரியா, விஜய் சார், கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்யா லட்சுமி, எங்கள் நண்பர்கள், சினிமா துறையில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். நான் மற்றும் ஆண்டனி இருவரும் எங்கள் சொந்த விஷயங்களை முடிந்தவரை ரகசியமாக வைத்திருக்கவே விரும்புகிறோம். அவர் கூச்ச சுபாவம் கொண்டவர், சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருப்பார்
Keerthy Suresh Lover Antony Thattil
12 ஆம் வகுப்பு படிக்கும் போது ஆர்குட்டில் ஆண்டனியை பாலோ செய்தேன். அவர் என்னை விட ஏழு வயது மூத்தவர், கத்தாரில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு மாதம் ஆர்குட்டில் நன்றாக சாட் செய்தோம், பிறகு ஒரு உணவகத்தில் சந்திக்க சென்றபோது, நான் என் குடும்பத்தினருடன் இருந்தேன், அதனால் அவரிடம் பேச முடியவில்லை. அதனால் அவருக்கு கண்ணடித்து விட்டுச் சென்றேன். பிறகு, 'தைரியம் இருந்தால் எனக்கு காதலைச் சொல்லுங்க' என்று சொன்னேன். 2010-ல் முதன் முதலில் எனக்கு காதலைச் சொன்னார், 2016-ல் எங்கள் உறவு மேலும் நெருக்கமானது. திருமணம் வரை கழற்றக் கூடாது என்று ஒரு மோதிரம் கொடுத்தார். என்னுடைய எல்லா படங்களிலும் அந்த மோதிரத்தைப் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நடிச்சிருக்கவே மாட்டேன்! கீர்த்தி சுரேஷ் வேதனை!
Keerthy Suresh Love Story
தொடர்ந்து திருமணம் பற்றிப் பேசிய அவர், 'இது ஒரு கனவு மாதிரி இருந்தது. ஏனென்றால் நாங்கள் ஓடிப்போகும் கெட்ட கனவுகளைக் கண்டிருக்கிறோம். என்னுடைய இதயம் நிறைந்திருந்தது, இது எங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான தருணம். எங்கள் உறவு ஆறு வருடங்கள் தொலைதூரத்தில் இருந்தது. கொரோனா காலகட்டத்தில் மட்டுமே நாங்கள் ஒன்றாக வாழ ஆரம்பித்தோம். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இவர் எனக்கு கணவராக கிடைத்தது அதிர்ஷ்டம்' என்று கீர்த்தி கூறினார்.
keerthy suresh wedding
கடந்த டிசம்பரில் கீர்த்தி சுரேஷ், கோவாவில் ஆண்டனி தட்டிலை மணந்தார். அவர்களின் திருமணம், அவர்களின் காதலைப் போலவே ரகசியமாக நடந்தது. சினிமா துறையில் ஒரு சிலர், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. ஆண்டனி துபாய் மற்றும் கேரளாவின் கொச்சியில் தொழில் செய்து வரும் தொழிலதிபர். அவர் தன்னுடைய சொந்த ஊரில் பிரபலமான ரிசார்ட்களை நடத்தி வருகிறார், கீர்த்தியின் நகரமான சென்னையிலும் சில தொழில்களைப் பதிவு செய்துள்ளார். பணக்கார தொழிலதிபராக இருந்தாலும், ஆண்டனி தன்னுடைய வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கவே விரும்புவாராம்.
இதையும் படியுங்கள்... 'பேபி ஜான்' படத்தில் கீர்த்திக்கு சிபாரிசு செய்தது இந்த டாப் ஹீரோயினா? அவரே பகிர்ந்த சீக்ரெட்!