கீர்த்தி சுரேஷா இது? ஓவர் ஸ்லிம்... முகமெல்லாம் சுருங்கி போய் இப்படி ஆகிட்டாங்களே..! ரசிகர்கள் ஷாக்!

First Published | Apr 4, 2021, 12:10 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ், சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில்... ஓவர் ஸ்லிம்மாக.. முகமெல்லாம் சுருங்கி போய் உள்ளார். அழகாக இருந்தாலும் ரசிகர்கள் கீர்த்தியின் பழைய அழகை மிஸ் பண்ணுவதாக தெரிவித்து வருகிறார்கள்.
 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
மகாநடி திரைப்படத்தின் மூலமாக கிடைத்த தேசிய விருது மற்றும் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
Tap to resize

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
கொழு, கொழு லுக்கில் இருந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் இப்போது எந்த உடையாக இருந்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.
விதவிதமான மார்டன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது புடவை, பாவாடை தாவணி என டிரெடிஷனல் லுக்கிலும் சோசியல் மீடியாக்களை கலங்கடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அம்மா அப்பாவுடன் பாவாடை தாவணியில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி, தற்போது ரிச்சாக சேலையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் துபாய்க்கு சென்ற போது, இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இதில் பார்க்க கீர்த்தி அழகாக இருந்தாலும்... தற்போது இருப்பதை விட ஓவர் ஒல்லியாக, முகத்தில் பழைய கலை இல்லாமல்... முகம் குட்டியாக சுருங்கி போய்... வித்தியாசமாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பழைய அழகை மிஸ் பண்ணுவதாக தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!