‘முள்ளும் மலரும்’, ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள தர்ஷா குப்தா. விஜய் தொலைக்காட்சியின் நெம்பர் ஒன் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 மூலமாக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்தை திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார்.
தன்னுடைய படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் தர்ஷா குப்தா பதிவிட்ட போட்டோ ஷூட்களுக்கு கீழ் அவர் சிறிய வியாபாரிகளிடம் நகை, புடவையை ஆகியவற்றை விளம்பரம் செய்வதாக கூறி பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் லைவில் பதிலளித்த தர்ஷா குப்தா, “நானாக சென்று யாரிடமும், எந்த ஒரு பொருளையும் விளம்பரம் செய்கிறேன் என்று சொல்லி வாங்குவதில்லை. அதேபோல் சிறு வியாபாரிகள் கொடுக்கும் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக நான் எந்தவித தொகையும் வாங்குவதில்லை. சிறிய வியாபாரிகள் என்பதால் அவர்களுக்கு உதவுவதற்காகவே நான் எனது இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வந்தேன்.
எனக்கு அந்தப் பொருட்கள் தேவையில்லாதது தான். பணம் கொடுத்து விளம்பரம் செய்யச் சொன்னால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த புடவையை அணிந்து போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடவேண்டும். எனக்கு அதற்கு எல்லாம் நேரம் கிடையாது. அதனால் தான் நான் பணம் பெறுவது இல்லை. ஆனால் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். அடுத்தவர்களை ஏமாற்றுவதாக சொல்வதை கேட்கவே மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
நான் இன்று அழக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் இப்போது இருக்கும் நிலையை அடைய நிறைய அவமானங்களை கடந்து வந்திருக்கிறேன். எனவே உண்மையை தெரிந்து கொண்டு பேசுங்கள். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்தால் காயப்படுத்துகிறார்கள் என்று கண்கலங்கிய படி தர்ஷா குப்தா பேசியுள்ளது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.