துணிக்கடையில் வேலை பார்த்திருக்கேன்... டிராகன் நாயகி கயாடு லோஹரின் அதிர வைக்கும் கதை!

Published : Mar 25, 2026, 10:04 AM IST

டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை கயாடு லோஹர், சினிமாவுக்கு வரும் முன் தான் பார்த்த வேலைகள் பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

PREV
14
Kayadu Lohar jobs before becoming actress

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் கயாடு லோஹர். இவர் தற்போது தமிழில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். அண்மையில் சாய் அபயங்கரின் பவழ மல்லி பாடலில் அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடி இருந்தார். அப்பாடல் செம டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தான் செய்த வேலைகள் குறித்து கயாடு லோஹர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. துணிக்கடை முதல் ஸ்டார்பக்ஸ் வரை பல இடங்களில் வேலை பார்த்ததாகவும், தனக்கு லேப்டாப் கூட சரியாகப் பயன்படுத்தத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

24
கயாடு லோஹரின் மறுபக்கம்

இதுபற்றி கயாடு லோஹர் பேசும்போது, "சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நான் நிறைய வேலைகள் செஞ்சிருக்கேன். ஸ்டார்பக்ஸ், துணிக்கடைன்னு வேலை பார்த்திருக்கேன். பல ஐடி கம்பெனிகளிலும் வேலை செஞ்சிருக்கேன். ஆனா ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, எனக்கு லேப்டாப் ஒழுங்கா பயன்படுத்தவே தெரியாது. ஐடி கம்பெனிகள்ல கூட டிரெய்னிங் பீரியட்ல மட்டும்தான் நான் வேலை பார்த்தேன்," என்று சிரித்துக்கொண்டே கூறினார். இப்படி பல போராட்டங்களுக்கு பின்னரே தான் நடிகையாக அடியெடுத்து வைத்ததாக கயாடு லோஹர் கூறி இருக்கிறார்.

34
கயாடு லோஹர் அடுத்த படம்

டோவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படம் மூலம் மலையாள சினிமாவில் மீண்டும் ஆக்டிவாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர். டோவினோ தாமஸை வைத்து டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதற்கு முன்பே வெளியான படத்தின் போஸ்டர்களும், பாடலும் சோஷியல் மீடியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. டீசரின் விஷுவல்ஸ், படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. வேர்ல்ட் வைட் ஃபிலிம்ஸ் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ் மற்றும் சி க்யூப் ப்ரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சாணுக்யா சைதன்யா சரண் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். 'பள்ளிச்சட்டம்பி' வரும் ஏப்ரல் 10-ம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. 1950-60 காலகட்டத்தில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

44
ரிலீசுக்கு ரெடியான 'பள்ளிச்சட்டம்பி'

இந்தப்படத்தில் ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில், பாலிவுட் சூப்பர்ஹிட் பாடகர் விஷால் மிஸ்ரா முதல்முறையாக மலையாளத்தில் பாடிய 'காட்டுச்செம்பகம்' பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனியும், ஜேக்ஸ் பிஜோயும் இணையும் நான்காவது படம் இது. இதற்கு முன் அவர்கள் கூட்டணியில் வெளியான 'குயின்', 'ஜன கண மன', 'மலையாளி ஃப்ரம் இந்தியா' ஆகிய மூன்று படங்களின் பாடல்களும் சார்ட்பஸ்டர் ஹிட் அடித்ததால், இந்தப் படத்தின் பாடல்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தில் விஜயராகவன், சுதீர் கரமனா, பாபுராஜ், வினோத் கெடாமங்கலம், பிரசாந்த் அலெக்ஸ் போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories