அடடேய்... கவினின் வருங்கால மனைவி மோனிகா; லாஸ்லியாவின் தோழியா? இதென்னடா புது டுவிஸ்டா இருக்கு!

First Published | Aug 6, 2023, 8:39 AM IST

நடிகர் கவினுக்கு வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவரின் வருங்கால மனைவி மோனிகா பற்றி ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவி ஒளிபரப்பான பேவரைட் சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. அந்த சீரியலில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் கவின். இதையடுத்து சில ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கிய கவின், நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் பெரியளவில் கைகொடுக்காததால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இன்றி தவித்த கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்டார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்ட கவின் அந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகும் அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். ஆனால் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவர் பாதியிலேயே வெளியேறியதால் அவரால் இறுதிப்போட்டி வரை செல்ல முடியாமல் போனது. இருப்பினும் அந்நிகழ்ச்சி கவினின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Tap to resize

அதுமட்டுமின்றி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் காதல் மன்னனாகவும் வலம் வந்தார் கவின். அதில் கலந்துகொண்ட சாக்‌ஷி கவினை உருகி உருகி காதலித்தார். ஆனால் கவினோ தான் லாஸ்லியாவை காதலிப்பதாக கூறி சாக்‌ஷிக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டில் காதல் புறாக்களாக வலம் வந்தது கவின் - லாஸ்லியா ஜோடி. அந்நிகழ்ச்சியில் உள்ளே வந்த லாஸ்லியாவின் தந்தை அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... விட்ட இடத்தை பிடித்த சுந்தரி... டி.ஆர்.பி-யில் டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்த சீரியல்கள்! என்னென்ன தெரியமா?

தந்தையின் எதிர்ப்பை மீறியும் கவின் உடனான காதலை லாஸ்லியா தொடர்ந்ததால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றெல்லாம் பேச்சி எழ தொடங்கியது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கவின் - லாஸ்லியாவின் காதலும் முடிவுக்கு வந்தது. அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும், இருவரும் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாகவும் லாஸ்லியாவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவினின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி கவினுக்கும் அவரது நீண்ட நாள் தோழியான மோனிகா டேவிட்டிற்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த மோனிகா டேவிட், லாஸ்லியாவின் தோழி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் லாஸ்லியாவிடம் ஸ்டைலிஸ்ட் ஆக பணியாற்றி இருக்கிறாராம். 

லாஸ்லியாவும், மோனிகா டேவிட்டும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் சினிமா ரேஞ்சுக்கு கவினோட லவ் ஸ்டோரில இப்படி ஒரு டுவிஸ்டா என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ, மோனிகா உடனான காதல் தான் கவின் - லாஸ்லியாவின் காதல் முறிவுக்கு காரணம் என கூறி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்...  "வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஆனந்தம்" - ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை இலியானா - பெயர் என்ன தெரியுமா?

Latest Videos

click me!