பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைஃப் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவரும் தாங்கள் பெற்றோர் ஆக இருப்பதாக அறிவித்துள்ளன. தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகை கத்ரீனா கைஃப். இந்த ஜோடி தங்கள் கர்ப்பம் குறித்த செய்திகளை சீக்ரெட்டாக வைத்திருந்த நிலையில், அண்மையில் கத்ரீனாவின் போட்டோ ஒன்று வெளியாகி வைரலானது. அதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அவரே தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருக்கிறார்.
24
கர்ப்பமாக இருக்கும் கத்ரீனா கைஃப்
சமூக வலைதளங்களில் கத்ரீனா கைஃப் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார், அதில் அவர் மெரூன் நிற கவுனில் போஸ் கொடுப்பதும், தனது பேபி பம்ப்பை காட்டுவதும் தெரிகிறது. விக்கி கெளஷல் கத்ரீனாவின் வயிற்றை தன் கையால் பிடித்தவாரு போஸ் கொடுத்துள்ளார். கத்ரீனா தனது மகப்பேறு போட்டோஷூட் மூலம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை உறுதி செய்திருக்கிறார். சமூக ஊடக பயனர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி, 'அவருக்காக மிகவும் மகிழ்ச்சி, வாழ்த்துகள்' என்று எழுதியுள்ளனர். நடிகை ஜான்வி கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் கத்ரீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
34
கத்ரீனா-விக்கி குழந்தை எப்போ பிறக்கும்?
கத்ரீனா கைஃபின் கர்ப்பம் குறித்த செய்திகள் ஜூலை மாதம் முதலே பரவ தொடங்கியது, மும்பையில் உள்ள ஒரு போட் ஹவுஸில் அவரும் விக்கி கௌஷலும் இருக்கும் வீடியோ வைரலானது. அதில் அவர் பெரிய அளவிலான வெள்ளை சட்டை மற்றும் தளர்வான பேன்ட் அணிந்திருந்தார். இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் கருதினர். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியான நிலையில், கத்ரீனா அக்டோபர் அல்லது நவம்பரில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் 2019-ல் முதல் முறையாக சந்தித்தனர். மெதுவாக, அவர்களின் நட்பு வலுப்பெற்று, காலப்போக்கில் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமானார்கள். இதைத் தொடர்ந்து, அவர்கள் டிசம்பர் 9, 2021 அன்று ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் திருமணம் செய்து கொண்டனர். விக்கி மற்றும் கத்ரீனாவின் சினிமா கெரியரை பொறுத்தவரை, விக்கிக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பாக இருந்தது, ஏனெனில் அவரது 'சாவா' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றது. தற்போது அவர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் உடன் 'லவ் அண்ட் வார்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். மறுபுறம், கத்ரீனா கைஃப் கடைசியாக 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தில் காணப்பட்டார்.