நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இடையே இவர்கள் இருவரும் லிவ்விங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவ்வாறு சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். பிரபலங்கள் புடைசூழ பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணமான நான்கே மாதத்தில், தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது இந்த ஜோடி. நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என ஏராளமானோர் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறி நயன்தாரா ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இதன்மூலம் அவர்கள் திருமணம் ஆகும் முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளது உறுதியாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, நடிகை கஸ்தூரி தற்போது புது குண்டை தூக்கி போட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்” என பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை நயன்தாரா தடையை மீறி குழந்தை பெற்றுக்கொண்டாரா? அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நலக்குறைபாடுகள் உள்ளதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்... நயன்தாராவின் திடீர் முடிவு... மருத்துவர்கள் கூறியது இது தான்..? குண்டை தூக்கி போட்ட பயின்வான் ரங்கநாதன்!