Karuppu : துணிவு, பீஸ்ட் பட லைஃப் டைம் வசூல் சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய கருப்பு

Published : May 27, 2026, 12:20 PM IST

Karuppu Box Office Record : சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. அதில் தற்போது விஜய், அஜித் பட வசூலை முறியடித்திருக்கிறது.

PREV
14
Karuppu Box Office Record

சூர்யாவின் 'கருப்பு' படம் ரிலீஸ் ஆனது முதலே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியாகி 12 நாட்கள் கடந்த பிறகும், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த கடும் வெயிலிலும் மக்கள் தியேட்டர்களுக்குப் படையெடுத்து படத்தைப் பார்த்து வருகின்றனர். இது ஒரு ஃபேண்டஸி ஆக்சன் டிராமா படம். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்களின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

24
கருப்பு வசூல்

அதன்படி சூர்யாவின் கருப்பு திரைப்படம் உலகளவில் 300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் அப்படம் 12 நாட்களில் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்து தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாட்டில் 120 கோடி வசூலை கடந்துள்ளதன் மூலம், விஜய், அஜித் படங்களின் லைஃப்டைம் வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது. கருப்பு. விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் வாரிசுருட்டிய லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை கருப்பு திரைப்படம் 12 நாட்களில் முந்தி சாதனை படைத்துள்ளது.

34
கருப்பு சாதனை

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்தது. அப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.120 கோடி வசூலித்திருந்தது. அதேபோல் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2023-ம் ஆண்டு திரைக்கு வந்த துணிவு திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.116 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இந்த இரு படங்களின் வசூலை கருப்பு திரைப்படம் முந்தி இருக்கிறது. இதன்மூலம் கோலிவுட்டில் ஒரு மாஸான கம்பேக் கொடுத்துள்ளதோடு, தான் ஒரு பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் சூர்யா.

44
'கருப்பு' ஓடிடி

இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்றாக 'கருப்பு' அமைந்துள்ளது. இந்த ஃபேண்டஸி ஆக்சன் டிராமா படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். படத்தின் திரைக்கதையை ரத்ன குமார், டி.எஸ். கோபி கிருஷ்ணன், அஷ்வின் ரவிச்சந்திரன், ராகுல் ராஜ் மற்றும் கரண் அரவிந்த் குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரின் கீழ் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா, த்ரிஷா கிருஷ்ணனுடன் பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி சுப்ரமணியம், சுவாசிகா, ஷிவதா மற்றும் சுப்ரீத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'கருப்பு' படத்தின் தியேட்டருக்குப் பிறகான ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் வீடியோவும், சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழும் பெற்றுள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories