கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்திற்கு பிறகு 'கங்குவா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு தற்போது வா வாத்தியார்' மற்றும் 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.
25
Vaa Vaathiyaar Movie Karthi Character:
கார்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்:
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் 'வா வாத்தியார்'. இந்தப் படத்தில் கார்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், வடிவுக்கரசி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற உயிர் பத்திக்காம என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. கார்த்தியின் 26ஆவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்யமுடியவில்லை.
45
Vaa Vaathiyaar Release date changed
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்:
இந்த நிலையில் தான் தற்போது 'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, 'வா வாத்தியார்' படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படவில்லை. மேலும், கூடுதலாக 20 நாட்கள் தேவைப்படும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது.
அதுமட்டுமின்றி இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பும் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. கார்த்தியும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். ஆதலால் வா வாத்தியார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தாமதம் ஏற்படும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி போகிறது.
'சர்தார் 2' படத்திற்கு குறிப்பிட்ட காலம் கால்ஷீட் கொடுத்த நிலையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே 'வா வாத்தியார்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடிக்கப்பட்ட படத்தை ஆகஸ்ட் அல்லது நவம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. Karthi's 'Vaa Vaathiyaar' release delayed! What is the reason? இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.