இதையடுத்து பையா, நான் மகான் அல்ல, பிரியாணி என கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்றி வந்த யுவன், தற்போது கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள விருமன் படத்துக்கும் இசையமைத்து வருகிறார். முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளன்று ரிலீசாக உள்ளது.