இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, அருந்ததி, பஞ்சமுகி, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இவர் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருந்த நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இதற்கிடையே பாகுபலி 2வில் அனுஷ்கா சற்று உடல் பூசினப்போல இருந்தார் என விமர்சங்கள் எழுந்தன.