மலையாள திரையுலகில் அடுத்தடுத்து சூப்பர் ஹீரோக்கள் மீது எழும் பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னாதாக திலீப் குமார் நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றுமொரு பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
25
vijay babu
நடிகர் விஜய் பாபு மீது புகார் :
மலையாள திரையுலகில் பிரபல நடிகராகவும் வலம் வருபவர் விஜய் பாபு. . 'ப்ரைடே பிலீம் ஹவுஸ்' (Friday Film House) தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனராக பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்திருக்கிறார். இவரது படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர் இவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து பலமுறை தன்னை பலாத்காரம் செய்ததாகவும், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் அந்த நடிகை புகார் தெரிவித்திருந்தார்.
35
vijay babu
இதை அடுத்து நடிகர் விஜய் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதையடுத்து அந்த நடிகையின் புகாருக்கு பேஸ்புக் லைவில் மறுப்பு தெரிவித்த விஜய் பாபு, நடிகையின் பெயரை பலமுறை பயன்படுத்தியதால் கடுப்பான நடிகை ஆதரவாளர்கள் விஜய் பாபு மீது பல வழக்குகள் தொடுத்தனர்.
45
vijay babu
தப்பி சென்ற விஜய் பாபு :
மே 19-ம் தேதி போலீஸில் ஆஜராவதாக விஜய் பாபு தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனிடையே விஜயபாபு துபாய் தப்பி சென்று விட்டதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நடிகரின் பாஸ்போர்டை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
55
vijay babu
இந்நிலையில், நடிகர் விஜய் பாபு நேற்றே துபாயில் இருந்து ஜார்ஜியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. அவர் துபாயில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.