நெஞ்சுக்கு நீதி கொடுத்த தெம்பு..முன்னணி ஹீரோ.. பான் இந்தியா படம்..கலக்கும் அருண்ராஜா!

Kanmani P   | Asianet News
Published : May 21, 2022, 08:44 PM ISTUpdated : May 21, 2022, 08:46 PM IST

நெஞ்சுக்கு நீதி படத்தின் அமோக வரவேற்பை தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் தற்போது கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

PREV
14
நெஞ்சுக்கு நீதி கொடுத்த தெம்பு..முன்னணி ஹீரோ.. பான் இந்தியா படம்..கலக்கும் அருண்ராஜா!
Nenjuku Needhi

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகிய கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன்  மயில்சாமி, தன்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி ராஜசேகர், ஆரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 

24
Nenjuku Needhi

திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படத்திற்கு போனி கபூர் தயாரித்திருந்தார். இந்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஆர்ட்டிகிள் 15 என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இதில்  உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

34
arunraja kamaraj

உதயநிதி எம்.எல்.ஏ ஆன பிறகு ரிலீசாகும் இப்படத்திற்கு நல்ல வரமுதல் நாளில் ரூ.1.30 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் திமுகவினர் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ஒரு சில இடங்களில் இப்படத்தின் டிக்கெட்டுகள் இலவசமாகவும் வழங்கப்பட்டன.

 

44
actor karthi

இதனிடையே இயக்குனர் அருண்ராஜா இயக்கிய  இரண்டு படங்களும் வெற்றியை  கொடுத்தது. இதை தொடர்ந்து நடிகர் கார்த்தி படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும், அப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க தென்னாபிரிக்காவில் நடக்கும் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories