தலைவர் 169 எப்ப ரிலீஸ் தெரியுமா?...சுட சுட வெளியான தகவல்!

Kanmani P   | Asianet News
Published : May 21, 2022, 08:17 PM IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினி அடுத்தாக நடிக்கவுள்ள தலைவர் 169 வது படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

PREV
14
தலைவர் 169 எப்ப ரிலீஸ் தெரியுமா?...சுட சுட வெளியான தகவல்!
annathe rajanikanth

அண்ணாத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை அறிவித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும் இது குறித்த அறிவிப்பு விஜய் நடித்த படம் வெளியாவதற்கு சற்று முன்பு வெளியிடப்பட்டது. படத்திற்கு தற்காலிகமாக ' தலைவர் 169 ' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

24
rajini 169

படத்தின் முழு ஸ்கிரிப்டை இறுதி செய்ய ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.'பீஸ்ட்' படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்த் படத்தையும் தயாரிக்கவுள்ளது. 

34
thalaivar 169

ரஜினிகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக அமெரிக்க சென்றுள்ளார் இதன் பொருட்டு படப்பிடிப்பு குறித்து  அவசரப்பட வேண்டாம் என்றும் படத்தை முடிக்க அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளார்கள் என கூறப்படுகிறது.

44
thalaivar 169

இந்நிலையில்  'அஜித் 61' மற்றும் 'தளபதி 66' முறையே தீபாவளி மற்றும் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே தயாரிப்பாளர்கள் அடுத்தாண்டு  தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.'தலைவர் 169' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், படப்பிடிப்பிற்காக படக்குழு பல்வேறு இடங்களுக்களை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories