டாக்டர் தொடர்பை கைவிடாத சிவகார்த்திகேயன்...லீக்கான எஸ்.கே 21 கெட்டப்!

Kanmani P   | Asianet News
Published : May 21, 2022, 06:53 PM IST

நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் தொடர்பு  சிவகார்த்திகேயன் 21லும் தொடரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
16
டாக்டர் தொடர்பை கைவிடாத சிவகார்த்திகேயன்...லீக்கான எஸ்.கே 21 கெட்டப்!
sivakarthikeyan

நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தில் ராணுவ டாக்டராக நடித்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், யோகி பாபு தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்திருந்தார். இந்த படம் ரசிகர்களை கவர்ந்திருந்தது.இந்த படத்திலும் அனிருத் இசையமைத்திருந்தார்.

26
Don movie

100 கோடிகளை தட்டி தூக்கிய டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் படம் வெளியாகியிருந்தது. சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில்  மே 13ம் தேதி பிரம்மாண்டமாக வெளியான உ டான் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முந்தைய டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.  இந்த படத்திற்கும்  அனிரூத் தான் இசையமைத்துள்ளார்.

36
don

கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த டான் படத்தை, லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்தன. மேலும், இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 

46
don

சிவாங்கி, மிர்ச்சி விஜய், முனீஸ்காந்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி பால சரவணன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.நல்ல விமர்சங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படத்தை பார்த்த ரஜினி பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் வசூல் ரூ. 60 கோடியை கடந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

56
SK 20

இந்த படத்தை தொடர்ந்து , அயலான், சிங்கப்பாதை,எஸ்கே 20 போன்ற படங்கள் கமிட் ஆகியுள்ளார். இதில் எஸ்.கே படத்தை ‘ஜாதி ரத்னலு’ இயக்கிய டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இப்படம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இதில் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கையிட் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

66
SK 21

இதையடுத்து சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ​​​​சமீபத்திய தகவல் என்னவென்றால், சிவகார்த்திகேயன் ' எஸ்கே 21 ' படத்தில் இராணுவ அதிகாரியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு ' மாவீரன் ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories