பிக்பாஸ் சீசன் 6 -ம் ரெடி..எப்ப இருந்து தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : May 21, 2022, 09:16 PM IST

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிய பிக்பாஸின் அடுத்த 6 சீசன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

PREV
15
பிக்பாஸ் சீசன் 6 -ம் ரெடி..எப்ப இருந்து தெரியுமா?
bigg boss

இந்தி உள்ளிட்ட பிறமொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி சோ தமிழ் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீசனில் இருந்து கமல் தான் தொகுப்பாளராக உள்ளார்.

25
Bigg boss tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் கலந்து கொள்ளும் ஹவுஸ்மேட்களுக்கு மைக் கொடுக்கப்படும். கழிவறைக்கு செல்லும் போது தவிர மற்ற எல்லா இடங்களிலும் மைக்கை அணிந்திருக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டை சுற்றிலும் கேமராக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்.

35
Bigg boss tamil

இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தமிழ் பேச வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தக்கூடாது, அனுமதியின்றி வளாகத்தை விட்டு வெளியேறக்கூடாது, நியமன செயல்முறை பற்றி விவாதிக்கக்கூடாது, பகலில் தூங்கக்கூடாது, சக வீட்டாருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடக்கூடாது. காகிதத்தில் அல்லது எழுத்து வடிவில் எழுத வேண்டாம். உள்ளிட்ட விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.

45
bigg boss tamil 5

முதல் பாகத்தில் ஆரவ் ,இரண்டாம் பாகத்தின் ரித்விகா, மூன்றாம் பாகத்தில் முகன் ராவ், நான்காம் பாகத்தில் ஆரி அர்ஜுன், சமீபத்தில் முடிவடைந்த 5 வது சீசனில் ராஜு ஜெயமோகன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடர்ந்து அல்டிமேட் என்னும் பெயரில் ஓடிடியில் ஒளிபரப்பானது. இதில் முந்தைய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பாலாஜி முருகதாஸ் வெற்றியாளரானார். கமல் பின்னர் சிம்பு இருவரும் அடுத்தடுத்து தொகுப்பு செய்தனர்.

55
bigg boss

இந்நிலையில் 6 வது சீசன் குறித்த தகவல் வெலிஓயாகியுள்ளது. விக்ரம் படத்திற்காக அல்டிமேட்டில் இருந்து விலகிய கமல் தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்டார் வரும் ஜூன் 3-ம் தேதி விக்ரம் வெளியாகவுள்ளது. இதையடுத்து 6 வது சீசனையும் கமல் தொகுத்து வழங்குவார் என சொல்லப்படுகிறது. அதோடு இந்த சீசன்  ஜூலை மாதம் நடுவே அல்லது ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 6 துவங்கும் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories