உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடுத்தால் போதும்...முன்னணி ஹீரோக்களை மறைமுகமாக தாக்கும் கார்த்தி

First Published Oct 13, 2022, 1:13 PM IST

உழைப்புக்கேத்த ஊதியம் போதுமே என கார்த்திக் கூறியிருப்பது பெரிய நடிகர்களை குத்தி காட்டுகிறாரோ என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டி வரும் பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாக வந்து ரசிகர்களை ஈர்த்திருந்தார் கார்த்தி. வாரிசு நடிகர் என்ற பெயருடன் பருத்திவீரன் மூலம் அறிமுகமான கார்த்தி இன்று முன்னணி நாயகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

Karthi

கார்த்தி நடிப்புகள் தற்போது சர்தார் படம் உருவாகி வருகிறது. நீண்ட கால எதிர்பார்ப்பாக இருக்கும் இந்த படம் தீபாவளி பண்டிகையொட்டி வருகிற 21ஆம் தேதி வெளியாக உள்ளது.  இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பி.எஸ் மித்ரன் வழங்குகிறார்.  இதன் ப்ரோமோஷன் வேலைகள் ஆரம்பித்துள்ளது.  

மேலும் செய்திகளுக்கு...raja rani 2 : மாமியாருக்காக அதிரடியில் இறங்கும் சந்தியா...இப்படி டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுத்தா எப்படி?

இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி தமிழில் உளவாளிகள் பற்றிய கதைகள் அதிக அளவில் வந்தது இல்லை.  நாம்ம ஊரில் ஒருவர் உளவாளியாக இருந்தால் எப்படி இருக்கும். அவர் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? எந்த விஷயங்களை அவர் உளவு வேலை பார்க்கிறார் என்பதுதான் இந்த படத்தின் ஹைலைட் எனக் கூறியுள்ளார்.  தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி. அப்பாவாக நடித்ததால் மிகவும் சிரமப்பட்டதாகவும், ஆயுதப்படை போலீஸ் என்பதுதான் நிஜ கேரக்டர் மற்றவை அந்த போலீஸ் போடுகிற வேஷங்கள் எனவும் வெளிப்படையாக படம் குறித்து தெரிவித்திருக்கிறார். 

பின்னர் செய்தியாளர் ஒருவர், பொன்னியின் செல்வனுக்குப் பிறகு உங்கள் சம்பளத்தை உயர்த்தி விட்டீர்களாமே ?என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள கார்த்தி : படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்த நானும் தான் ஆசைப்படுகிறேன். ஆனால் யார் தருவார்கள் ? உழைப்புக்கேற்ற ஊதியம் ஒழுங்கா வந்தாலே போதும். என்னை பொறுத்தவரை சம்பளத்தை பற்றி பெரிதாக கருதுவதில்லை. அண்ணனை போல விருதெல்லாம் வாங்க எனக்கும் ஆசை உண்டு. ஆனால் இந்த மாதிரி படங்கள் எனக்கு அமையவில்லை. எண்டர்டெயின்மெண்ட் படங்கள் தான் அமைகிறது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...இந்த வயசுல ஹனிமூன் வேறயா?...கூட்டுசேர்ந்து பழிவாங்கும் பாக்கியலட்சுமி...

சமீபகாலமாக தங்களத்தை படம் ஓரளவு வெற்றி பெற்றவுடன் நூறு கோடி வரை சம்பளத்தை முன்னணி நாயகர்கள் உயர்த்துகிறார்கள் என்கிற சர்ச்சை கிளம்பி வரும் நிலையில், உழைப்புக்கேத்த ஊதியம் போதுமே என கார்த்திக் கூறியிருப்பது பெரிய நடிகர்களை குத்தி காட்டுகிறாரோ என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

click me!