திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் தங்களுடைய வாரிசுகளை களமிறக்குவது என்பது தவிர்க்க முடியாதது. அப்படி வாரிசுகளாக அறிமுகமாகும் இளம் நடிகர், நடிகைகள் தங்களுடைய திறமையால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் என்பதை மறுக்க இயலாது. அப்படி தங்களுடைய திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த கீர்த்தி சுரேஷ், காளிதாஸ் ஜெயராம், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களின் பட்டியல் நீண்டது.