கமல் ஹாசனுடன் கரம் கோர்த்த வாரிசு நடிகர்..! அப்பாவை தொடர்ந்து மகனுடன் அசத்தல் காம்போவில் உலகநாயகன்!

First Published | Jul 26, 2021, 7:32 PM IST

உலக நாயகன் உடன் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர்களான ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. 

vikram movie

மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 3 முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த 16ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங்கின் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தொடங்கியது. இதில்  இயக்குனர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

vikram movie

'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் அரசியல் பணிகளில் பிசியாக இருந்ததாலும், கொரோனா பேரிடர் காரணமாகவும் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

Tap to resize

vikram movie

அதற்கு முன்னதாக படம் தொடங்க உள்ளதை அறிவிக்கும் விதமாக கடந்த வாரம் ஜூலை 10ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், விஜய் சேதுபதி, கமல், ஃபகத் பாசில் ஆகிய மூவரின் முகமும் இடம் பெற்றிருந்தது. உலக நாயகன் உடன் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர்களான ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. 

vikram movie

அரசியலில் தீவிரம் காட்டி வந்த கமல் நீண்ட இடைவெளைக்குப் பிறகு ஷூட்டிங்கில் பங்கேற்றதால் ஒரு மாணவன் போல் உணர்கிறேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார். தற்போது படப்பிடிப்பு படுஜோராக நடந்து வரும் நிலையில், அடுத்து இந்த படத்தில் நடிக்க உள்ளது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். 

Kamal hassan

தற்போது பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் விக்ரம் படத்தில் கமலுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் உலக நாயகனுக்கு மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

Latest Videos

click me!